தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், கிருஷ்ணன் கோவில், கம்மாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (29்-ம் தேதி) இரவு திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இதன் காரணமாக வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால், பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

பெரும்பாலான பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி வீதியில் வந்து அச்சத்துடன் நிற்கும் சூழல் ஏற்பட்டது. சில வீடுகளில் பாத்திரங்கள் கீழே விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சிவகாசி நகரில் இருந்து மேற்கே 2.3 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் ரிக்டர் அளவில் 3.0 ஆக நில அதிர்வு பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், சிவகாசி நகரை மையமாகக் கொண்டு பதிவானதாகக் கூறப்படுகிறது.