நியூசிலாந்து கிரிக்கெட் அணி இம்மாதம் இரண்டாவது வாரத்தில் இந்தியாவுக்கு வருகை தந்து நம் நாட்டு அணியுடன் விளையாடி வருகிறது. முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்ற நிலையில், அதில் நியூசிலாந்து அணி வென்றது. இதையடுத்து தொடங்கி நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றிருக்கிறது.
Add Zee News as a Preferred Source
India vs New Zealand 5th T20: நாளை கடைசி டி20 போட்டி
இந்த நிலையில், இத்தொடரின் கடைசி போட்டி நாளை (ஜனவரி 31) நடைபெற இருக்கிறது. முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி தொடர்ந்து வென்று தொடரை கைப்பற்றிய நிலையில், 4வது டி20 போட்டியை நியூசிலாந்து அணி வென்று ஆறுதல் பெற்றது. இந்த சூழலில், நாளைய போட்டியிலும் நியூசிலாந்து வென்று கூடுதல் ஆறுதல் பெறுமா அல்லது இந்தியா ஆதிக்கம் செலுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம், தொடரை வென்ற இந்தியா ஒரு பயிற்சி போட்டியாக கருதி அணியில் சில மாற்றங்களை செய்து ஏதேனும் முயற்சிக்குமா? என்ற கேள்வியும் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.
Sanju Samson: சஞ்சு சாம்சனுக்கு மற்றொரு வாய்ப்பு
நாளைய போட்டியில் இந்திய அணி பெரும்பாலும் 4வது போட்டியில் களமிறக்கிய வீரர்களையே களமிறக்கும் என தெரிகிறது. இத்தொடரில் தொடர்ந்து சொதப்பிய சஞ்சு சாம்சனுக்கு மற்றொரு வாய்ப்பாக நாளைய போட்டி கொடுக்கப்படும் என தெரிகிறது. எனவே அவர் கழட்டிவிடப்பட வாய்ப்பில்லை. அதேபோல் பேட்டிங் வரிசையில் மாற்றம் நிகழவும் வாய்ப்பில்லை என தெரிகிறது.
Jasprit Bumrah: பும்ராவுக்கு ஓய்வளிக்க வாய்ப்பு
பந்து வீச்சில் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்க வாய்ப்புள்ளது. அவர் கடந்த 3வது மற்றும் 4வது டி20 போட்டியில் விளையாடி உள்ளார் என்பதால், அவரது பணிச்சுமையை குறைக்க மேலும் அவரை காயத்தில் இருந்து பாதுகாக்க பும்ராவை பெஞ்சில் அமர வைக்க வாய்ப்புள்ளது. அவருக்கு ஓய்வளிக்கும் பட்சத்தில் இஷான் கிஷனை உள்ளே கொண்டு வர வாய்ப்புள்ளது. ஒருவேளை அக்சர் படேல் காயத்தில் இருந்து குணமடைந்து இருந்தால், அவரை உள்ளே எடுத்து வருவார்கள். இதை தவிர்த்து இந்திய அணியில் மாற்றங்கள் நிகழாது என தெரிகிறது.
India Predicted Playing XI: இந்திய அணியின் உத்தேச பிளேயிங் 11
சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் அல்லது இஷான் கிஷன், ரவி பிஷ்னோய்.
India vs New Zealand 5th T20: போட்டி எங்கே நடக்கிறது?
நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 5வது டி20ல் போட்டி நாளை (ஜனவரி 31) கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் இருக்கும் கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கிறது. போட்டி நாளை மாலை 7 மணிக்கு தொடங்கும். ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் போட்டியை காண முடியும்.
About the Author
R Balaji