Rohit Sharma 2026 T20 World Cup Prediction: 2026 டி20 உலகக் கோப்பை தொடர் வரும் பிப்ரவரி 07ஆம் தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கும் இத்தொடர் மார்ச் 08ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடருர் நெருங்கி வரும் நிலையில், நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையில் வென்ற இந்திய அணி, அதனை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் தயாராகி வருகிறது.
Add Zee News as a Preferred Source
இந்த டி20 உலகக் கோப்பை தொடர் குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் பல்வேறு கணிப்புகளை கணித்தும் வருகின்றனர். இந்த நிலையில், இந்திய டி20 அணியின் முன்னாள் வீரர் ரோகித் சர்மா, டி20 உலகக் கோப்பையின் இந்தியா பற்றி கருத்து பகிர்ந்துள்ளார். அவர், இந்திய அணி வென்றால் அது இந்த ஒருவரால் தான் நடக்கும் என ஒரு வீரரை குறிபிட்டு தெரிவித்துள்ளார்.
Arshdeep Singh: இந்தியா வென்றால் இவரால்தான் வெல்லும்
இது தொடர்பாக பேசிய ரோகித் சர்மா, இந்திய அணி நல்ல பலத்துடன் உள்ளது. டி20 உலகக் கோப்பையை வெல்லும் முழு தகுதி இந்திய அணிக்கு உள்ளது. அவர்களால் அதனை வெல்லவும் முடியும். ஆனால் அதற்கு வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் முக்கிய பங்கு வகிப்பார். சொல்லப்போனால் இந்திய அணி கோப்பையை வென்றால் அது அவரால் தான் என கூறலாம். அர்ஷ்தீப் சிங்கின் பெரிய பலமே புது பந்தில் நன்றாக ஸ்விங் செய்வதுதான்.
Arshdeep Singh – Jasprit Bumrah: அர்ஷ்தீப் சிங் – ஜஸ்பிரீத் பும்ரா காம்போ
போட்டியின் தொடக்கத்திலேயே அவரால் விக்கெட்களை வீழ்த்த முடிகிறது. அதேபோல் டெத் ஓவர்களிலும் சிறப்பாக பந்து வீசுகிறார். இந்த இரண்டு தருனங்களுமே டி20 கிரிக்கெட்டில் மிகவும் முக்கியமானவை. அதில் சிறந்தவராக அர்ஷ்தீப் சிங் உள்ளார். அவருடன் ஜஸ்பிரீத் பும்ரா போன்றவர் இருப்பது இன்னும் சிறப்பு. அது மிகப்பெரிய பலம். இருவருமே எதிரணியை அச்சுறுத்தக்கூடியவர்.
2024 உலகக் கோப்பை இறுதி போட்டியில் சிறப்பான ஆட்டம்
கடந்த உலகக் கோப்பை இறுதி போட்டியில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக செயல்பட்டார். நல்ல ஃபார்மில் ஆடிக்கொண்டிருந்த குயிண்டன் டி காக்கை அவர் வீழ்த்தினார். அதேபோல் 19வது ஓவரை வீசிய அவர் அதிகபட்சமாக 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதுதான் ஆட்டத்தின் திருப்பு முனையாக மாறியது. இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.
India Squad For T20 World Cup: 2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், சிவம் துபே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, வருண் சகரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் படேல் (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங்.
About the Author
R Balaji