இந்தியாவை தாண்டி உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள வீரர் விராட் கோலி. இந்தியாவின் முன்னாள் கேப்டனான விராட் கோலி, மைதானத்தில் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டு உள்ளார். இன்ஸ்டாகிராம், ட்விட்டர், பேஸ்புக் என அனைத்து தளங்களிலும் இவருக்கு அதிகமான பாலோவர்ஸ் இருந்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. வெள்ளிக்கிழமை காலை விராட் கோலி இன்ஸ்டாகிராம் கணக்கு திடீரென மாயமானது. அவரது இன்ஸ்டாகிராம் கணக்கை தேடிய ரசிகர்களுக்கு இது அதிர்ச்சி அளித்தது. அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த புகைப்படங்கள், பாலோவர்ஸ் என அனைத்தும் மறைந்து போயின. விராட் கோலி இன்ஸ்டாகிராம் கணக்கை மூடிவிட்டாரா? அல்லது அவரது கணக்கு ஹேக் செய்யப்பட்டதா போன்ற பல்வேறு கேள்விகள் சமூக வலைத்தளங்களில் நீடித்தது. இந்நிலையில் சில மணி நேரங்களிலேயே மீண்டும் அவர் இன்ஸ்டாகிராம் கணக்கு திரும்பி வந்தது.
Add Zee News as a Preferred Source
ரசிகர்கள் மகிழ்ச்சி
விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு என்ன ஆனது என்று ரசிகர்கள் மனதில் கேள்விகள் எழுந்த நிலையில், சிறிது நேரத்திலேயே விராட் கோலி இன்ஸ்டாகிராம் கணக்கு மீண்டும் செயல்பட தொடங்கியது. அவர் ஏற்கனவே பதிவிட்ட புகைப்படங்கள் மற்றும் பாலோவர்ஸ் அதே நிலைக்கு திரும்பின. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விராட் கோலி இன்ஸ்டாகிராம் கணக்கு சிறிது நேரம் மாயமாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சில மணி நேரங்களுக்குள் ட்விட்டர் போன்ற தளங்களில் ‘விராட் கோலி இன்ஸ்டாகிராம்’ என்ற பதிவு இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது.
Virat Kohli’s Instagram is back. pic.twitter.com/jtE5R4aYgB
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 30, 2026
இன்ஸ்டாகிராம் மூலம் வருமானம்
விராட் கோலிக்கு பல்வேறு வகையில் வருமானம் வந்தாலும், இன்ஸ்டாகிராம் மூலம் கோடி கணக்கில் வருமானம் வருகிறது. 270 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்ஸ்களை வைத்துள்ள விராட் கோலி ஆசியாவிலேயே இன்ஸ்டாகிராமில் அதிக பாலோவர்ஸ் கொண்டவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இன்ஸ்டாகிராமில் விராட் கோலி ஒரு விளம்பரத்திற்கு கோடிக்கணக்கில் கட்டணம் வசூலிக்கிறார் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான தகவலின் படி ஒரு விளம்பரத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதற்கு விராட் கோலி 14 கோடி வரை கட்டணம் பெறுகிறார் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் உலக அளவில் அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்களில் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸிக்கு அடுத்தபடியாக விராட் கோலி உள்ளார்.
விராட் கோலியின் சொத்து மதிப்பு
விராட் கோலியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 1000 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் மட்டுமில்லாமல் பல வழிகளில் அவர் வருமானம் பெறுகிறார். பிசிசிஐ ஒப்பந்த மூலம் ஆண்டுக்கு சுமார் 7 கோடி அவருக்கு சம்பளம் கிடைக்கிறது. ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இருந்து ஆண்டுக்கு 21 கோடி வருமானம் பெறுகிறார். மேலும் பூமா, எம்ஆர்எப், ஆடி போன்ற நிறுவனங்களின் விளம்பர தூதர் ஆகவும் விராட் கோலி உள்ளார். இதை தவிர One8, Wrogn போன்ற நிறுவனங்களையும் விராட் கோலி நடத்தி வருகிறார்.
About the Author
RK Spark