State Awards: "ஜூரி மெம்பர்ஸ் இந்தப் படங்களை பார்க்கிறாங்களானு தெரில!" – குழந்தை நட்சத்திரம் அஸ்வத்

2016-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரைக்கான தமிழக அரசின் மாநில விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

தமிழக அரசுக்கு, திரைப்பிரபலங்கள் பலரும் நன்றி தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

Ashwath Child Artist
Ashwath Child Artist

இந்நிலையில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது தனக்கு அறிவிக்கப்படவில்லை என மனம் நொந்து வீடியோ பதிவிட்டிருக்கிறார் ‘சூப்பர் டீலக்ஸ்’ அஸ்வத்.

‘சூப்பர் டீலக்ஸ்’, ‘மை டியர் பூதம்’, ‘பஹீரா’ போன்ற படங்களில் அஸ்வத் நடித்திருக்கிறார்.

குழந்தை நட்சத்திரம் அஸ்வத், “தமிழக அரசின் மாநில விருதுகள் அறிவிச்சிருக்காங்க. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதுக்கு என்னை அறிவிப்பாங்கனு நெனைச்சிருந்தேன்.

ஆனா, அதுல என்னுடைய பெயர் இல்ல. 2019-ல் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ராசு குட்டியாக நான் நடிச்சிருந்தேன். அந்தப் படத்துக்காக எனக்கு விருது கொடுப்பாங்கனு நினைச்சேன்.

ஆனால், விருது எனக்கு கிடைக்கல. பிறகு, 2022-ல் வெளியான ‘மை டியர் பூதம்’ படத்துக்காக விருது கொடுப்பாங்கனு எதிர்பார்த்தேன். அந்தப் படத்துக்கு எனக்கு அறிவிக்கல.

ஜூரி மெம்பர்ஸ் இந்த மாதிரியான படங்களைப் பார்க்கிறாங்களா, இல்லையானே தெரியல!? ஒரு நடிகர் நடிக்கிறார்னா, அவருக்கு அங்கீகாரம் கிடைக்கணும்.

அவருக்கு அங்கீகாரமே கிடைக்கலைனா, அவர் நடிக்கிறதே வேஸ்ட்ல. ஏன் இந்த மாதிரி அநியாயம் பண்றாங்கனு எனக்கு புரியல.

மக்கள் நீங்க அந்த ரெண்டு படத்தைப் பாருங்க, அந்த வயசுல அந்த நடிப்புக்கு மேல வேற என்ன வேணும்னு நீங்க சொல்லுங்க!” என வருத்தத்துடன் பேசியிருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.