டெல்லி: தீ விபத்தில் தம்பதி பலி

டெல்லி, தலைநகர் டெல்லியின் ஷாதரா நகர் ஷிவ்புரி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் முதல் தளத்தில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பிரேம் சாஹர் (வயது 75) அவரது மனைவி ஆஷா (வயது 65) ஆகிய இருவர் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும், வீட்டிற்குள் தீக்காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்த தம்பதியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். … Read more

டி20 உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு

காபுல், 10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7ம் தேதி தொடங்கி மார்ச் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் 20 அணிகள் பங்கேற்க உள்ளன. இதற்கான அணி வீரர்களை அந்தந்த நாடுகள் அறிவித்து வருகின்றன. இந்நிலையில், டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக ரஷீத் கான் அறிவிக்கப்பட்டுள்ளார். டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் … Read more

2026-ம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் மோதல் ஏற்படலாம் – அமெரிக்கா கணிப்பு

வாஷிங்டன், காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குத லையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் ராணுவங்கள் இடையே மோதல் ஏற்பட்டது.இந்த நிலையில் 2026-ம் ஆண்டில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மீண்டும் ஆயுத மோதல் ஏற்படும் என்று அமெரிக்க சிந்தனைக் குழு ஒன்று கணித்துள்ளது. க வுன்சில் ஆன் பாரின் ரிலேஷன்ஸ் அமைப்பு அமெரிக்க வெளியுறவுக் கொள்கை நிபுணர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் அதிகரித்த பயங்கரவாதச் செயல்பாடு காரணமாக … Read more