மும்பை; தானேவில் உள்ள கோழிப்பண்ணையின் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள சுமார் 25,000 கோழிகளை கொள்ள மகாராஷ்டிரா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மும்பை அருகே தானேவில் உள்ள ஷஹாபூர் தாலுகாவின் வெஹ்லோலி கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணையின் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள சுமார் 25,000 கோழிகளை அடுத்த சில நாட்களுக்குள் கொல்ல தானே மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் ஜே நர்வேகர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக,அவர் கூறுகையில்: வெஹ்லோலி கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணையில் சுமார் 100 கோழிகள் இறந்துள்ளன.பறவைக் காய்ச்சல் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு,அவற்றின் மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. எனினும், பாதிக்கப்பட்ட கோழிப்பண்ணை மற்றும் அதனை சுற்றி ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் சுமார் 25,000 பறவைகள் அடுத்த சில நாட்களுக்குள் கொல்லப்படும். அதன்படி,நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை எடுக்க தானே மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது”, என்று கூறியுள்ளார்.