சீனாவின் குள்ளநரித்தனம்.. உலக நாடுகளுக்கு சரியான பாடமே.. !

எந்த நேரத்தில் என்ன பிரச்சனை வெடிக்குமோ? என்ற அச்சத்தின் மத்தியில் பாகிஸ்தான், இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது. அரசியல் நிலைமையும் சரியானதாக இல்லை. தற்போது அன்னிய செலாவணி கையிருப்பு, கடன் பிரச்சனை, நிதிப் பற்றாக்குறை, ஏற்றுமதி சரிவு, பணவீக்கம், அன்னிய முதலீடு சரிவு என பல நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன.

இந்த நெருக்கடிக்களுக்கு சீனா தான் ஒரு வகையில் காரணம் என்றும் நிபுணர்கள் கூறி வருகின்றனர். குறிப்பாக சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டம் தான் காரணம் என கூறுகின்றனர்.

இந்தியாவினை தொடரும் சீனா.. பைடனின் திட்டம் கைகொடுக்கவில்லையே.. ரஷ்யாவுக்கு நல்லது தான்!

கொரோனாவினால் பாதிப்பு

கொரோனாவினால் பாதிப்பு

ஏற்கனவே கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சர்வதேச பொருளாதாரம், தற்போது சர்வதேச அளவில் நிலவி வரும் நிலைக்கு மத்தியில் இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், சர்வதேச அளவில் சப்ளை சங்கிலியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது மேற்கொண்டு பொருளாதாரத்தில் இன்னும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

கடன் பொறி இராஜதந்திரம்

கடன் பொறி இராஜதந்திரம்

சீனாவின் கடன் பொறி இராஜதந்திரம் என்பது சர்வதேச அளவில் பல நாடுகளில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சீனாவின் நட்பு நாடுகளாக இருக்கும் பாகிஸ்தான், இலங்கையின் பெரும் நெருக்கடிக்கு, சீனா ஒரு முக்கிய காரணம் என வல்லுனர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருந்த இலங்கை, பாகிஸ்தான் நாடுகள், சீனாவின் குள்ளநரித்தனத்தால் பெரும் கடன் பிரச்சனையில் தத்தளித்து வருகின்றன.

நெருக்கடியில் பாகிஸ்தான்
 

நெருக்கடியில் பாகிஸ்தான்

குறிப்பாக பாகிஸ்தான் சீனாவின் பெல்ட் ரோடு திட்டத்திற்காக சீனாவிடம் கடன் வாங்கியிருந்தது. ஏற்கனவே கடன் நெருக்கடியால் தத்தளித்து வந்த பாகிஸ்தானின் அன்னிய செலாவணி கையிருப்பும் 291.50 கோடி ரூபாயாக குறைந்து விட்டதாக, பாகிஸ்தானின் ஸ்டேட் பாங்க் ஆப் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

பிரச்சனையில் பாகிஸ்தான்

பிரச்சனையில் பாகிஸ்தான்

இதற்கிடையில் பாகிஸ்தானுக்கு இருக்கும் வெளிநாட்டு கடன், சீனாவிடம் இருந்த கடனுக்கான வட்டி, கடனை திருப்பிச் செலுத்துதல் போன்ற நெருக்கடிகள் இருந்து வருகின்றது. இதற்கிடையில் அன்னிய செலாவணி கையிருப்பு, ஏற்றுமதி சரிவு, கடன் பிரச்சனை, நிதிப்பற்றாக்குறை, பணவீக்கம், முதலீடுகள் சரிவு என பலவும் இன்னும் பாகிஸ்தானை மோசமான நிலைக்கு தள்ளியுள்ளன.

இலங்கையிலும் பாதிப்பு

இலங்கையிலும் பாதிப்பு

இலங்கையிலும் இதே நிலை தான். ஏற்கனவே கொரோனாவினால் சீரழிந்த பொருளாதாரம், தற்போது பணவீக்கத்தினால் மோசமான நிலையில் உள்ளது. இதற்கிடையில் சீனாவின் கடன் நெருக்கடியும் இன்னும் மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது. மேலும் தற்போது உக்ரைன் – ரஷ்யா போரினால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.

சரியான பாடமே

சரியான பாடமே

இலங்கை, பாகிஸ்தானின் இந்த நிலையானது உலக நாடுகளுக்கு ஒரு சரியான பாடம் எனலாம். இரு நாடுகளும் ஒரே நேரத்தில் நெருக்கடியினை சந்தித்துள்ளன. இது பணவீக்கம், பொருளாதார நெருக்கடி என்பதை தாண்டியும் ஒரு பொதுவான காரணி எனில் அது கடன். ஆக இது உலக நாடுகளுக்கு சரியான பாடமே. இது சீனாவின் கடன் வலை மட்டும் அல்ல, பணவீக்கம், பொருளாதார நெருக்கடி என பலவும் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட வேண்டியவையாக உள்ளன. அதேபோல சீனாவின் BRI திட்டம் என்பது உலக நாடுகளுக்கு சரியான பாடமே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Sri lanka,Pakistan crisis good lessons for countries

Sri lanka,Pakistan crisis good lessons for countries/சீனாவின் குள்ளநரித்தனம்.. உலக நாடுகளுக்கு சரியான பாடமே.. !

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.