திருமலை: ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் வருகிற 5ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறங்காவலர் குழு தலைவர் தெரிவித்துள்ளார். திருமலை அன்னமய்யா பவனில் அறங்காவலர் குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா தலைமை தாங் பேசியதாவது: கொரோனா குறைந்துள்ளதால் படிப்படியாக அனைத்து தரிசனத்திலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மலைப்பாதையில் பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கான திவ்ய தரிசன டிக்கெட் விரைவில் மீண்டும் தொடங்கப்படும். கடந்தாண்டு பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட திருப்பதி ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் புனரமைப்பு பணிகள் முடிந்தது. வருகிற 5ம் தேதி முதல் மீண்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஏழுமலையான் கோயிலில் உற்சவ மூர்த்திகளுக்கான சிம்மாசனம் பழையதானதால் ரூ.3.60 கோடியில் தங்க தகடுகள் பதிக்கப்பட்ட 2 சிம்மாசனம் செய்யப்படும். திருமலை பாலாஜி நகரில் பேட்டரி பஸ் சார்ஜிங் செய்ய 2.86 ஏக்கர் நிலம் போக்குவரத்து துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. தேவஸ்தானத்திற்கு அசையா சொத்துக்கள், பொருட்கள் நன்கொடை வழங்குபவர்களுக்கு மதிப்பிற்கு ஏற்ப வசதிகள் செய்து கொடுக்கப்படும். தமிழ்நாடு உளுந்தூர்பேட்டையில் வெங்கடேஸ்வர சுவாமி கோயில் கட்டுவதற்காக முதற்கட்டமாக ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு வேலூரில் கட்டப்பட்ட திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மைய கோயிலை இடித்துவிட்டு புதிதாக விரிவாக்கம் செய்து பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுடன் கட்டப்படும். இதற்காக விரைவில் ஒப்பந்தம் அழைக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு ேபசினார்.உண்டியல் காணிக்கைதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று அதிகாலை முதல் இரவு வரை 75,010 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 31,116 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயிலில் தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் ₹3.59 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். கோயிலில் இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 9 அறைகளில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
