புதுச்சேரி : புதுச்சேரி மேற்கு அ.தி.மு.க., சார்பில் மே தின கூட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்தது.அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் செல்வராஜி தலைமை தாங்கினார். எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் கார்த்திகேயன், கட்சி பேச்சாளர்கள் அமுதா, மூர்த்தி சிறப்புரை ஆற்றினர்.நலத்திட்ட உதவிகள் வழங்கி, மாநில செயலாளர் ஓம்சக்திசேகர் பேசியதாவது:புதுச்சேரி மாநிலத்தில் மக்களிடத்தில் அதிக ஆதரவு பெற்ற கட்சியாக அ.தி.மு.க., உள்ளது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வராதா என்று மக்கள் ஏங்கும் சூழல் உள்ளது.
மீண்டும் புதுச்சேரி அ.தி.மு.க., எழுச்சி பெறும்.புதுச்சேரி மாநிலத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் சோர்ந்து போகாமல் சிங்கம் போல உள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் தொழிற்சாலைகள் வெளியேற தி.மு.க.,- காங்., கட்சிகளே காரணம். கம்யூனிஸ்ட் கட்சியினரை துாண்டிவிட்டு போராட்டம் நடத்தினர்.புதுச்சேரி மாநிலத்தில் தொழிலாளர்களுக்கு குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க., மட்டுமே. எந்த கட்சிக்கும் செல்ல மாட்டேன். உயிர்மூச்சு உள்ளவரை அ.தி.மு.க.வில் மட்டுமே இருப்பேன்.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி., ராமதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Advertisement