பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து, நாடு முழுவதும் சமையல் கேஸ் எரிவாயு விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
இதற்க்கு கடும் கண்டனங்களை எழுந்துள்ள நிலையில், இந்த சமையல் எரிவாயு எரிவாயு விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை அருகே நடைபெற்ற திருமணத்தில் மணமக்களுக்கு மண் அடுப்பையும், விறகுகளை திருமண பரிசாக நண்பர்கள் வழங்கியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை ராணிப்பேட்டை பகுதியில் அற்புத ஜோதி ஏஞ்சலின் சந்திரலேகா என்ற மணமக்களின் திருமண நிகழ்ச்சியின் போது, பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டிக்கும் விதமாக மணமக்களுக்கு மண் அடுப்பையும். விறகு கட்டையும் பரிசாக அளித்துள்ளனர்.
இதுகுறித்த காணொளிகள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
வெங்காயம், தக்காளி உள்ளிட்ட பொருள்களின் விலை உயரும் போது, திருமண நிகழ்ச்சில் மணமக்களுக்கு அதனை பரிசாக வழங்கி கண்டனம் தெரிவிக்கும் பழக்கம் வழக்கமாயியுள்ள நிலையில், தற்போது மண் அடுப்பு, விறகு கட்டக்கைள் பரிசாக வழங்கி கேஸ் விலையேற்றத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.