தமிழகத்தில் இன்று குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு.!

தமிழகம் முழுவதும் குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு இன்று நடைபெறுகிறது.

5,529 காலி பணியிடங்களுக்கான குரூப்-2 மற்றும் 2ஏ அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வெளியிட்டது. அதன்படி இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

அதன்படி இந்த பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு இன்று நடைபெற உள்ளது. காலை 9.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடக்கிறது. 200 ஒரு மதிப்பெண் வினாக்கள் கேட்கப்பட்டு 300 மதிப்பெண்ணுக்கு தேர்வு கணக்கிடப்படும்.

மேலும் இந்தத் தேர்வுக்கு தேர்வர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு அறைக்குள் வரவும், அதற்குமேல் வருபவர்களை தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படமாட்டாது என்றும் டி.என்‌.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. மேலும் ஹால் டிக்கெட் மற்றும் அடையாள அட்டையையும் தேர்வர்கள் கையில் கண்டிப்பாக எடுத்துவர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.