
தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு என கணிப்பு
அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிப்பு
தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று வீசக்கூடும் என்பதால் அங்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்