சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது என்பதும் இதனால் வங்கிகளில் வாகனக் கடன், வீட்டுக் கடன், பர்சனல் கடன் என பல்வேறு வகைகளில் கடன் வாங்கியவர்களுக்கு பெரும் திண்டாட்டமாக இருந்தது என்பதையும் பார்த்தோம்.
ஆனால் அதே நேரத்தில் ரெப்போ வட்டி விகிதம் உயவு காரணமாக பிக்சட் டெபாசிட் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் பல தனியார் வங்கிகள் பிக்சட் டெபாசிட் முதலீடுகளுக்கு வட்டியை அதிகரித்து அறிவிப்புக்களை வெளியிட்டு வரும் நிலையில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியும் தற்போது வட்டி விகிதத்தை அதிகரித்து உள்ளதாக அறிவித்துள்ளது.
நா ராஜா.. இன்போசிஸ் சிஇஓ இடத்தை பிடித்த விப்ரோ சிஇஓ தியரி டெலாபோர்ட்.. செமி டிவிஸ்ட்..!

பிக்சட் டெபாசிட்
ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் பாதுகாப்பான முதலீடாக பிக்சட் டெபாசிட் உள்ளது. இதில் வட்டி குறைவாக இருந்தாலும் பணத்திற்கு பாதுகாப்பு மற்றும் வரிச்சலுகை ஆகியவை இருப்பதால் பலர் இன்னும் பிக்சட் டெபாசிட் டெபாசிட்டில் முதலீடு செய்து வருகின்றனர்.

சிறந்த முதலீடு
ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், அந்த பணவிக்கத்திற்கு ஏற்ப பிக்சட் டெபாசிட்களில் வட்டி விகிதம் இல்லை என்றும், அதனால் பிக்சட் டெபாசிட்களில் முதலீடு செய்ய வேண்டாம் என்றும் ஒருசில பொருளாதார ஆலோசகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் பங்குச்சந்தையில் புரிதல் இல்லாததால் ஏற்படும் நஷ்டம், தனியாரிடம் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஏமாறுதல் ஆகியவற்றைவிட பிக்சட் டெபாசிட் சிறந்த முதலீடு என்றே பெரும்பாலான பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

எஸ்பிஐ வங்கி
இந்த நிலையில் தற்போது எஸ்பிஐ வங்கி ஒருசில பிக்சட் டெபாசிட்டிற்கான வட்டியை அதிகரித்து உள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து எஸ்பிஐ வங்கியின் தலைவர் தினேஷ் குமார் காரா அவர்கள் கூறியபோது, ‘புதிய பிக்சட் டெபாசிட் திட்டங்களை பொருத்தவரை, அவை புதிய வட்டி விகிதங்களின்படி இருக்கும் என்றும், சில முதிர்வுகளுக்கு ஏற்கனவே வட்டி விதிதம் அதிகரிப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்ததை அடுத்தே பிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதம் உயர்ந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

வட்டி வீதம்
இந்நிலையில் எஸ்பிஐ வங்கியில் 12 மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரை பிக்சட் டெபாசிட்களில் முதலீட் செய்தவர்களுக்கு தற்போது 5.10 சதவீத வட்டி விகிதம் பெற்று வந்த நிலையில் இனி 3 முதல் 5 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்திற்கு புதிய பிக்சட் டெபாசிட் முதலீடு செய்தால் 5.45 சதவிகிதம் வட்டி கிடைக்கும்.
Fixed deposit interest rates to be hiked, says SBI Chairman
Fixed deposit interest rates to be hiked, says SBI Chairman | பிக்சட் டெபாசிட் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்: வட்டியை உயர்த்தியது எஸ்பிஐ