உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் பற்றிய செய்திகள் அவ்வப்போது வந்துகொண்டேதான் இருக்கும். தற்பொழுது அவரின் மகன் தனது பெயரையும் பாலினத்தையும் மாற்ற இருப்பதாக அறிவித்திருப்பது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

எலான் மஸ்க்கின் மகன் சேவியர் அலெக்சாண்டர் மஸ்க், 18 வயதான இவர், தான் மனதளவில் பெண் என்பதை புரிந்துகொண்டதும், தனது பெயரையும் பாலினத்தையும் மாற்ற விண்ணப்பித்துள்ளார். அமெரிக்க அரசின் சட்டத்தின்படி ஒருவருக்கு 18 வயது பூர்த்தியாகியிருந்தால் பெயர் மற்றும் பாலினத்தை மாற்றிக் கொள்ளலாம்.
அந்த வகையில் 18 வயது பூர்த்தியடைந்த சேவியர் அலெக்சாண்டர் மஸ்க் தனது பெயரை விவியன் ஜென்னா வில்சன் என்று மாற்ற முடிவு செய்து லாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்ட்டி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். பெயர் மாற்றத்திற்கான காரணத்தை அவர் கூறும் பொழுது, “இனிமேல், நான் எந்த வகையிலும் என்னைப் பெற்ற தந்தையுடன் வாழ விரும்பவில்லை. அவருடனான உறவை முறித்து கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
“I had a weird childhood,” my 18 year old said to me. “I can’t believe I’m as normal-seeming as I am.”
I said, “I’m very proud of you.”
“I’m proud of myself!”
— Justine Musk (@justinemusk) June 20, 2022
விவியன் ஜென்னா வில்ஸன் என்ற பெயரில் ‘வில்சன்’ என்பது அவரது தாயாரின் பெயர் (ஜெனிஃபர் ஜஸ்டின் வில்சன்). எலான் மஸ்க், ஜெனிஃபர் ஜஸ்டின் வில்சனைக் கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் செய்து அதன்பின் 2008-ல் விவாகரத்து செய்துவிட்டார். இந்தத் தம்பதியருக்குப் பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒருவர்தான் விவியன் ஜென்னா வில்சன். இவர் குறித்து ஜெனிஃபர் ஜஸ்டின் வில்சன் பகிர்ந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.