சம்பள பேச்சுவார்த்தையில் அம்மா? HR நிலைமையை நினைச்சா பரிதாபமா இருக்கு?

ஒரு அம்மா தன் குழந்தையின் அனைத்து தேவைகளையும் கேட்காமலே செய்து வருவார் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் அதே நேரத்தில் இதனை பயன்படுத்திக் கொண்டு ஒரு ஊழியர் சம்பள பேச்சு வார்த்தைக்கு எனது அம்மாவை அழைத்து வரலாமா? என சமூகவலைதளத்தில் கேட்டுள்ளார்.

அவரது இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் தங்கள் பாணியில் வித்தியாசமான கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருவது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

லட்சக்கணக்கில் போனஸ் மற்றும் சம்பள உயர்வு: ரோல்ஸ் ராய்ஸ் சூப்பர் அறிவிப்பு!

அம்மா

அம்மா

அம்மா என்பவர் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒருவர் என்பதும் நமக்கு நல்லது கெட்டது எதையுமே புரிந்து அவர் செய்யும் ஒவ்வொரு விஷயமும் நமது வாழ்க்கையின் உயர்வுக்கு தான் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. எந்த பிரச்சனையாக இருந்தாலும் அந்த பிரச்சனையை அம்மாவிடம் சொன்னால் அலசி ஆராய்ந்து அவர் சொல்லும் முடிவு நிச்சயம் வெற்றிகரமாக தான் இருக்கும்.

ஆன்மீக சக்தி

ஆன்மீக சக்தி

ஏனெனில் தங்கள் குழந்தைகளுக்காக அம்மாவால் எதையும் செய்ய முடியும் என்பதும் கடவுள் அவர்களுக்கு ஒரு ஆன்மீக சக்தியை இயல்பாகவே கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நித்தேஷ் யாதவ்
 

நித்தேஷ் யாதவ்

அந்த வகையில் நித்தேஷ் யாதவ் என்பவர் தனக்கு ஒரு மிகப் பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்ததை அடுத்து அவரை சம்பள பேச்சு வார்த்தைக்கு HR அழைத்துள்ளதாக தெரிகிறது. முதல் கட்ட பேச்சுவார்த்தையில் சம்பள பிரச்சினை தீரவில்லை என்பதை அடுத்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு அவர் என்னுடைய அம்மாவை சம்பள பேச்சு வார்த்தைக்கு அழைத்து வரலாமா என சமூகவலைதளத்தில் கேட்டுள்ளார்.

சம்பள பேச்சுவார்த்தையில் அம்மா

சம்பள பேச்சுவார்த்தையில் அம்மா

இந்த கேள்வியை நித்தேஷ் யாதவ் HR இடம் நேரடியாக கேட்டிருந்தால் அவர் உண்மையில் மயக்கமாகி இருப்பார். அவருடைய இந்த பதிவு இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் நெட்டிசன்கள் தங்களது காமெடி கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

திண்டாட்டம்

திண்டாட்டம்

சம்பளத்திற்காக HR இடம் பேசுவது என்பது ஒரு ஊழியர்களுக்கு மிகப்பெரிய பணியாக இருக்கும். ஆனால் நித்தேஷ் யாதவ் நினைத்தது போல் ஒரு ஊழியர் தனது அம்மாவை அழைத்து சென்றால் HR-க்கு தான் பெரும் திண்டாட்டமாக இருக்கும். ஏனெனில் ஒரு அம்மாவால் தன்னுடைய மகனுக்கு ஆதரவாக நிச்சயம் HR இடம் பேசி அவர் நினைத்தது போல் ஒரு சம்பளத்தை பெற்றுக் கொடுக்க முடியும். ஆனால் இது நடைமுறையில் சாத்தியமா? என்பது தான் கேள்வி

நெட்டிசன்கள் கமெண்ட்

நெட்டிசன்கள் கமெண்ட்

இந்த நிலையில் நித்தேஷ் யாதவ்வின் இந்த பதிவுக்கு ஒரு நெட்டிசன், ‘நீங்கள் உங்கள் அம்மாவை மட்டும் அழைத்து செல்வதற்கு பதிலாக உங்கள் மனைவியையும் சேர்த்து அழைத்துச் சென்றால் அந்த HR நிலைமை எப்படி இருக்கும்? என கற்பனை செய்து பார்க்கின்றேன்’ என்று கமெண்ட் செய்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Techie ask if I bring my mother for salary negotiation? Netizens funny comments

Techie ask if I bring my mother for salary negotiation? Netizens funny comments | சம்பள பேச்சுவார்த்தையில் அம்மா? HR நிலைமையை நினைச்சா பரிதாபமா இருக்கு?

Story first published: Saturday, July 9, 2022, 17:05 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.