ரெக்கை இல்லாமல் பறந்த எரிபொருள் விலை.. ஆனாலும் நஷ்டம் ஏற்படலாம்.. ஏன்..!

பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையானது அதன் உற்பத்தி செலவினங்களுக்கு கீழாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில்,அது எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் நஷ்டத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள், 10,700 கோடி ரூபாய் நஷ்டத்தினை எதிர்கொள்ளலாம் என தரகு நிறுவனம் கணித்துள்ளது.

புள்ளி கோலத்தில் மாதம் ரூ.75,000 வருமானம்.. அசத்தும் ஸ்ரீரங்கம் தீபிகா.. எப்படி தெரியுமா..?

குறைந்த விலையில் விற்பனை

குறைந்த விலையில் விற்பனை

இது குறித்து ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம் கணித்துள்ள ஆய்வறிக்கையில், பெட்ரோல், டீசல் உற்பத்திக்கு தேவையான (கச்சா எண்ணெய் விலை) மூலதன பொருட்கள் விலை அதிகரித்துள்ள நிலையில் கூட, செலவுக்கும் கீழாக எரிபொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ஆறுதல் அளிக்கும் விஷயம்

ஆறுதல் அளிக்கும் விஷயம்

எனினும் கடந்த சில தினங்களாக கச்சா எண்ணெய் விலையானது சரிவினைக் கண்டுள்ளது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

இது மேற்கண்ட எண்ணெய் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய ஆறுதல் அளிக்கலாம். எப்படியிருப்பினும் GRM குறையலாம் என்றும், இது வருவாயில் சற்று தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ஜின் பாதிப்பு
 

மார்ஜின் பாதிப்பு

உற்பத்தி செலவுக்கும் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும், எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களின் மார்ஜின் விகிதம் பாதிக்கப்பட்டுள்ளது என ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சுத்திகரிப்பாளர்கள்

சுத்திகரிப்பாளர்கள்

நாட்டின் பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விற்பனையில் 90% இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய மூன்றும் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களாகும். இவை கச்சா எண்ணெயை பெட்ரோல் மற்றும் டீசலாக மாற்றும் சுத்திகரிப்பு உரிமையாளர்களாகும்.

லாபம் தான்- ஆனாலும் நஷ்டம்

லாபம் தான்- ஆனாலும் நஷ்டம்

பெட்ரோலியத்தை எரிபொருளாகப் பதப்படுத்துவதால் கிடைக்கும் லாபம் கணிசமாக இருந்தாலும், நிலையான பெட்ரோல் மற்றும் டீசல் மார்கெட்டிங் பிரிவிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் அறிக்கையின் படி, வணிக ரீதியான பெட்ரோல், டீசலுக்கு லிட்டருக்கு 12 – 14 ரூபாயினை இழக்கின்றன. இது எண்ணெய் நிறுவனங்களின் வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது கடந்த காலாண்டு முடிவின் வளர்ச்சியிலும் தாக்கதினை ஏற்படுத்தியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

IOC, BPCL, HPCL may post Rs.10,700 crore loss in june quarter: ICICI securities

IOC, BPCL, HPCL may post Rs.10,700 crore loss in june quarter: ICICI securities/ரெக்கை இல்லாமல் பறந்த எரிபொருள் விலை.. ரூ.10,700 கோடி நஷ்டத்தில் எண்ணெய் நிறுவனங்கள்.. ஏன்?

Story first published: Monday, July 11, 2022, 19:14 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.