திருப்பூர் எம்.எஸ் நகரைச் சேர்ந்தவர் சுமதி. இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சுமதியின் கணவருக்கு தேனி மாவட்டத்தை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, சுமதியின் கணவர் தன் மனைவி மற்றும் மகளை விட்டு பிரிந்து சென்றுள்ளார். சுமதியின் கணவர் பழக்கம் ஏற்பட்ட அந்த பெண்ணுடன் பாண்டியன் நகரில் வசித்து வந்துள்ளார்.
இது தொடர்பாக, சுமதி திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், திருவாரூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். இரண்டு காவல்நிலையங்களிலும் சேர்த்து 20 முறை புகார் அளித்துள்ளார்.
ஆனால் காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்துள்ளனர். இதனால் வருத்தமடைந்த சுமதி தனது கணவரை மீட்டு தர கோரி இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளார்.