ஜி-7 நாடுகளின் ஒன்றியம் ,உலக வங்கி இலங்கைக்கு 14 மில்லியன் டொலர் நிதி உதவி

ஜி-7 நாடுகளின் ஒன்றியம் மற்றும் உலக வங்கி ,இலங்கைக்கு 14 மில்லியன் டொலர் உதவி வழங்கியிருப்பதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உணவு பிரச்சினையை தீர்ப்பதற்கே இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு தொடர்பான சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இணையவழி ஊடாக கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே பதில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையில் உர இறக்குமதி தடையின் காரணமாக உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இலங்கையின் அரிசி தேவை 20 மில்லியன் மெட்ரிக் தொன் களாகும் . ஆனால் தற்போது 16 மில்லியன் மெட்ரிக் தொன் அரிசியை மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் 6% இருக்கும் இதனால் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் அதன் தாக்கம் காரணமாக, வரும் ஆண்டில் பலர் தொழில்களை இழக்கும் அபாயம் உண்டு என்றும் பதில் ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தினார்.

பணவீக்கம் அதிகரித்ததினால் உணவு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மூன்றாம் உலக நாடுகள் வரிசைக்குள் செல்வதை தவிர்ப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்; என்றும் பதில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

யுக்ரேன்யுத்தம் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் ,இந்த யுத்தம் விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். இந்த யுத்தம் தொடர்ந்தால் உலகில் பலர் பட்டினியால் உயிர் இழக்கும்  நிலை ஏற்படும். ரஷ்யா உடனடியாக யுத்த நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்றும் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.