இந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவராக 2017-ல் ராம்நாத் கோவிந்த் பொறுப்பேற்றார். அவர் குடியரசுத் தலைவராக பதவியேற்று 5 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அவரின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனால், அவருக்கு பிரிவு உபசார விழா நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
இந்த பிரிவு உபசார விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடி, எம்.பி-க்கள், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் கலந்து கொண்டு நாடாளுமன்றத்தில் பிரியா விடை கொடுத்தனர்.

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இது தொடர்பாக பேசுகையில், “ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, நான் இந்திய குடியரசு தலைவராக இங்கே தான் பதவியேற்றேன். அனைத்து எம்.பிக்களுக்கும் எனது இதயத்தில் தனி இடம் உண்டு” என்றார்.
புதிய குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்மு இந்தியாவின் 15வது ஜனாதிபதியாக திங்கள்கிழமை பதவியேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.