ஆடி அமாவாசைக்காக மதுரையிலிருந்து காசிக்கு ஆன்மிக சுற்றுலா ரயில் – சிறப்புகள் என்னென்ன?

ஆடி அமாவாசைக்குத் தர்ப்பணம் கொடுக்க மக்களுக்கு வசதியாக ‘மதுரை – காசி உலா’ ரயிலை மத்திய ரயில்வே அமைச்சர் காணொலி காட்சி மூலமாக டெல்லியிலிருந்து தொடங்கி வைத்தார்.

இது குறித்து நம்மிடம் பேசிய மதுரை ரயில்வே கோட்டத்தின் ஊடகத் தொடர்பாளர், “சுதந்திரப் போராட்டத்தில் சம்பந்தப்பட்ட ரயில் நிலையங்களில் ரயில்வே துறையால் கொண்டாடப்பட விழாவின் நிறைவு நாளான நேற்று மதுரையிலிருந்து காசி செல்லும் ரயில் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

இது தனியார் ரயில் அல்ல. ஏற்கெனவே ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசைக்கு ஐ.ஆர்.சி.டி.சி உதவியுடன் இயக்கும் 12 நாள் சுற்றுலா ரயில் ஆகும்.

இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர், விஜயவாடா வழியாக இயக்கப்பட உள்ளது. இந்த சுற்றுலாவில் ஏழு சக்தி பீடங்களான ஆந்திர மாநில பீதாம்பரம் புருகுதிகா தேவி, பூரி பிமலாதேவி, ஜஜ்பூர் பிரஜா தேவி, கல்கத்தா காளி, கயா மங்கள கௌரி, காசி விசாலாட்சி, பிரயாக்ராஜ் அலோப் தேவி ஆகியோரை தரிசித்து விட்டு பாதகயா, நாபிகயா சென்று ஆடி அமாவாசை அன்று சிரோ கயாவில் முன்னோர்களுக்குத் தர்ப்பண பூஜை, பூரி ஜெகநாதர் கோயில் மற்றும் கொனார்க் சூரியக்கோயில், கொல்கத்தா பேலூர் மடம், விக்டோரியா மெமோரியல், விஷ்ணு பாத தரிசனம், காசி கங்கையில் புனித நீராடி ஸ்ரீ காசி விஸ்வநாதர், ஸ்ரீ அன்னபூரணி தரிசனம், இறுதியாக நாகபஞ்சமி தினத்தன்று விஜயவாடா கிருஷ்ணா நதியில் நீராடி கனகதுர்கா தரிசனத்துடன் சுற்றுலா நிறைவு பெறும்.

காசி விஸ்வநாதர் ஆலயம்

இந்த சுற்றுலா ரயிலில் 4 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 சமையல் பெட்டிகள், 2 சரக்கு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன.

அளிக்கப்படும் வசதிகளுக்கு ஏற்ப நபர் ஒருவருக்கு ரூ.21,500, ரூ.23,600, ரூ.31,400 என மூன்று வகையான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.