இந்தியாவின் அண்டை நாடுகள் அடுத்தடுத்து மோசமான பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக்கொண்டு இருக்கும் வேளையில் இந்திய மக்களுக்கும், பொருளாதார வல்லுனர்களுக்குத் தொடர்ந்து அச்சம் அதிகரித்து வருகிறது.
சொல்லப்போனால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை சரியான பாதையில் தான் செல்கிறதா என்று சரிபார்க்கும் அளவிற்குப் பயம் உருவாகியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் அமெரிக்க மத்திய வங்கி வட்டியை 0.75 சதவீதம் வட்டியை உயர்த்தியுள்ள நிலையில் ஆகஸ்ட் மாதம் நடக்க உள்ள நாணய கொள்கை கூட்டம் மிகவும் முக்கியமானதாக மாற்றியுள்ளது.
இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் என அடுத்தடுத்து தென்னாசிய நாடுகள் பொருளாதார நெருக்கடியிலும், நிதி நெருக்கடியிலும் சிக்கி வரும் வேளையில் இந்தியா மட்டும் தப்பித்தது எப்படி..?
ஓலா, உபர்-ஐ கட்டம் கட்டி தூக்கும் “கேரள சவாரி”.. இது தமிழ்நாட்டு வருமா..?

இலங்கை
இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்குச் சென்ற பின்னர் என்ன செய்வது எனத் தெரியாமல் இருந்த வேளையில் விலைவாசி உயர்ந்து மக்கள் போராட்டம் வெடித்து, ஆட்சி கவிழ்ந்தது. தற்போது புதிதாக ஆட்சி அமைத்துள்ள ரணில் விக்கிரமசிங்கே இலங்கை பொருளாதாரத்தைக் காப்பாற்றச் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற அலுவலகத்திலேயே குடியிருக்கிறது.

பாகிஸ்தான்
இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்த நிலையில் தான் ஆட்சி மாற்றம் செய்யப்பட்டாலும், ஆரம்பம் முதல் ஷெபாஸ் ஷெரீப் அரசு அன்னிய செலாவணியைக் கட்டுப்படுத்தவும், வரியை அதிகரிக்கவும் முக்கியத்துவம் அளித்தது.

நட்பு நாடுகள் உதவி
இதோடு பாகிஸ்தான் தனது நட்பு நாடுகளின் உதவியால் எளிதாகக் கடன் பெற்று அன்னிய செலவீனத்தை அதிகரித்தும், நிதிநிலையை மேம்படுத்திய காரணத்தால் அடுத்த சில வாரத்தில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 1.2 பில்லியன் டாலர் அளவிலான கடனை பெற உள்ளது.

பங்களாதேஷ்
இந்த நிலையில் இந்தியாவுடன் போட்டிப்போட்டுக் கொண்டு வேகமாக வளர்ச்சி அடைந்து வந்த பங்களாதேஷ் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பிரச்சனையாலும், அதிகப்படியான கடனை சமாளிக்க முடியாத காரணத்தால் பங்களாதேஷ் தற்போது சர்வதேச நாணய நிதியத்திடம் தன் நாட்டுப் பொருளாதாரத்தைக் காப்பாற்ற bailout கடனை கோரியுள்ளது.

இந்தியா
இந்தியாவின் அன்னிய செலாவணி இருப்பு தனது வரலாற்று உச்ச அளவில் இருந்து 11 சதவீத சரிந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி இரண்டு முறை தனதப் பென்ச்மார்க் வட்டியான ரெப்போ விகிதத்தை உயர்த்தினாலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்னும் 80 ரூபாய்க்கு அருகில் தான் உள்ளது.

வெளிநாட்டுக் கடன்
இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடனில் 79 பில்லியன் டாலரில் 40 பில்லியன் டாலர் தொகை அரசு நிறுவனங்களுடையது, இதனால் இந்தியாவில் ரூபாய் மதிப்புச் சரிந்தாலும் பெரிய பிரச்சனை இல்லை. மீதமுள்ள 40 பில்லியன் டாலர் மதிப்பிலான பாதுகாப்பற்ற வெளிநாட்டுக் கடன்கள் மூலம் பிரச்சனை ஏற்பட்டாலும் IMF அமைப்பிடம் கடன் கேட்கும் அளவிற்கு நிலை இந்தியாவுக்கு இன்னும் வரவில்லை.

டாலர் வருமானம்
இதேவேளையில் இந்தியாவுக்கு டாலர் வருமானத்தை ஈட்டும் ஐடி சேவைகள், ஏற்றுமதிகள் நாட்டின் பொருளாதாரத்தைக் காத்து வருகிறது. இதற்கிடையில் ஆர்பிஐ ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு ரூபாய் மதிப்பில் நாணய பரிமாற்றம் செய்ய அனுமதி அளித்துள்ளது. இத டாலர் தேவையைப் பெரிய அளவில் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெர்மனி-யை புலம்பவிட்ட ரஷ்யா.. பூச்சாண்டி காட்டும் விளாடிமிர் புதின்..!
After Sri Lanka, Pakistan now Bangladesh ran to the IMF for Bailout; How India managing in southasia region
After Sri Lanka, Pakistan now Bangladesh ran to the IMF for Bailout; How India managing கடைசியில் பங்களாதேஷ்-ம் மாட்டிக்கொண்டது.. இந்திய மட்டும் தப்பித்தது எப்படி..!