பிகார் மாநிலத்தில் வருவாய் மற்றும் நிலச்சீர்திருத்த அமைச்சராக இருப்பவர் ராம் சுரத் ராய். கடந்த மாதம், நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகளின் பணியிடமாற்றங்கள், பதவி உயர்வு ஆகியவை குறித்து முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு எதிராக அமைச்சர் கூறிய கருத்துகள் அந்த மாநிலத்தில் தலைப்புச் செய்திகளாக மாறின. அதைத் தொடர்ந்து, அக்னிபத் திட்டத்துக்கு எதிரானப் போராட்டத்தின்போது, ரயில்களுக்கு தீ வைத்தவர்களை பயங்கரவாதிகள் எனக் கூறியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
Oh My God..
“If all of you are alive today then it is the gift of Narendra Modi. : BJP MLA @RamsuratRaiThank You Modi ji, Do you have to pay GST on this too? pic.twitter.com/5CP8xVTKLA
— Mids..RG,PG,SG (@Subhanmids) July 31, 2022
இந்த நிலையில் அமைச்சர் ராம் சுரத் ராய் பீகாரின் முசாப்பூர் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் , “பிரதமர் மோடியால்தான் நீங்கள் அனைவரும் உயிருடன் இருக்கிறீர்கள். பாகிஸ்தானில் கொரோனா ஏற்படுத்திய பேரழிவை பாருங்கள்… பிரதமர் மோடி தடுப்பூசி மற்றும் பொருளாதார பிரச்னைகளை திறமையாக கையாண்டதன் மூலம்தான், நாம் அனைவரும் காப்பாற்றப்பட்டிருக்கிறோம்” எனக் கூறினார்.
அமைச்சர் பேசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.