அழகிகள் சப்ளை செய்வதாக ‘ஆப்’ மூலமாக வலை: கோவையில் பெண்கள் உள்பட 12 பேர் கைது

கோவை பீளமேடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் இளம்பெண்கள் பாலியல் தொழிலுக்கு இருப்பதாக கூறி ஆன்லைன் மூலம் பலரிடம்  பணம் பறித்து மோசடி நடந்து இருந்தது. இது தொடர்பாக அடுக்குமாடி குடியிருப்பு சார்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறுகையில்,

பீளமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக கூறி  ஆன்லைன் வாயிலாக பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றிய சம்பவம் குறித்து தனிப்படை அமைத்து  விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் “லோகண்டா” என்ற  இணையதளத்தை பயன்படுத்தி இந்த மோசடி நடந்து இருப்பதும், பாலியல் இச்சைக்காக இளைஞர்கள் பலர் பணத்தை கொடுத்து ஏமாந்து இருப்பதும்  தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக தனிப்படை போலிசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து செய்துள்ளனர். இணையத்தின் மூலம் தொடர்பு கொள்ளும் இளைஞர்களிடம் பேசும் இளம் பெண்கள் பணத்தை அக்கவுண்டில் போடச்சொல்லி மோசடி செய்து இருப்பதும், இது தொடர்பாக 5 பெண்கள் உட்பட  12 பேர் கொண்ட கும்பலை தனிப்படை  கைது செய்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந் மோசடி கும்பல் பெங்களூரை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டதும், இந்த கும்பலுக்கு ரிஸ்வான் என்பவர் மூளையாக செயல்பட்டு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய  12 பேரையும் தனிப்படை கைது செய்துள்ளனர். அவர்களிம் இருந்து 10 சிம்கார்டுகள் மற்றும் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

இணையதளம் மூலம் பணத்தை வசூலித்து விட்டு போலியான முகவரியை கொடுத்து  ஏமாற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. ரிஸ்வான் பெண்களை மூளை சலவை செய்து பாலியல் தொழிலாளி போல பேச வைத்து இருப்பதும் தெரிய வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த விசாரணையின் போது கோவையில் கஞ்சா விற்பனை நடைபெறும் இடங்களை கண்டறிந்துள்ளதாகவும், ஆந்திராவில் இருந்து கஞ்சா அதிகளவில் கோவை பகுதிக்கு  கொண்டு வருகின்றனர்

கஞ்சா சாக்லேட் ராஜஸ்தானில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்படுகின்றது. இதுகுறித்து விசாரிக்க தனிப்படை ராஜஸ்தான் சென்றுள்ளது. 360 டிகிரியில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்  தெரிவித்தார்.

ரகுமான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.