புதுடில்லி :“நம் நாட்டில் தயாரிக்கப்படும் ‘தேஜஸ்’ போர் விமானங்களை வாங்க, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட ஆறு நாடுகள் ஆர்வமாக உள்ளன,” என, ராணுவ இணை அமைச்சர் அஜய் பட் கூறினார்.லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த ராணுவ இணை அமைச்சர் அஜய் பட், “நம் நாட்டின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் தயாரிக்கும் தேஜஸ் போர் விமானங்களை வாங்க, அமெரிக்கா,
ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், அர்ஜென்டினா, எகிப்து ஆகிய நாடுகள் ஆர்வமாக உள்ளனர்.”மலேஷியா 2019லேயே தேஜஸ் போர் விமானங்களுக்கு ‘ஆர்டர்’ கொடுத்து உள்ளது,” என்றார்.மலேஷியா தற்போது பயன்படுத்தி வரும் ரஷ்யாவின் ‘மிக் 29’ ரக போர் விமானங்களை, தன் ராணுவத்தில் இருந்து விலக்க முடிவு செய்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒற்றை இன்ஜின் கொண்ட தேஜஸ் இலகு ரக போர் விமானத்துக்கு முக்கியத்துவம் அளிக்க மலேஷிய அரசு முடிவு செய்துள்ளது.
புதுடில்லி :“நம் நாட்டில் தயாரிக்கப்படும் ‘தேஜஸ்’ போர் விமானங்களை வாங்க, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட ஆறு நாடுகள் ஆர்வமாக உள்ளன,” என, ராணுவ இணை அமைச்சர் அஜய் பட் கூறினார்.லோக்சபாவில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்