ஒரு மொபைல் எங்கு தயாரிக்கப்பட்டது, அந்த போனின் மாதிரி எண் என்ன என்பதை எல்லாம் கண்டுபிடிக்க உதவும் ஓர் எண் என்றால், அது அந்த மொபைலின் IMEI (International Mobile Equipment Identity) எனப்படும் சர்வதேச மொபைல் சாதன அடையாள எண்ணாகும். மொபைல் தொலைந்துவிட்டால் அதனை கண்டுபிடிக்க உதவும் மிக முக்கிய எண் இந்த IMEI எண், நெட்வொர்க்கில் உள்ள மொபைல் சாதனத்தை தனித்துவமாக அடையாளம் காண பயன்படுத்தப்படுகிறது. போன்/மோடம் கொண்ட ஒவ்வொரு மொபைல்போன், ஜிஎஸ்எம் மோடம் போன்றவை தனிப்பட்ட 15 இலக்க IMEI எண்ணைக் கொண்டுள்ளது.

ஒவ்வொரு மொபைலிலும் IMEI எண் மாறுபட்டு காணப்படும். ஒரு மொபைலின் IMEI எண், அதன் நிகழ் இருப்பிடத்தை காட்டும் என்பதால், மொபைல் தொலைந்து போனாலோ, திருடப்பட்டாலோ IMEI எண்ணை பயன்படுத்தி, மொபைலில் உள்ள சிம் கார்டு அகற்றப்பட்டாலும், அதன் நிகழ் நிலையைக் கண்டறிய முடியும்.
இத்தனை பயன்பாடுகள் உள்ள IMEI எண்ணை ஆண்ட்ராய்டு மொபைலில் கண்டறிவது எப்படி?
– ஆண்ட்ராய்டு மொபைலில் settings-ஐ திறக்கவும்.
– அதில் phone settings-ஐ க்ளிக் செய்யவும்.
– கீழே IMEI எனக் கொடுக்கப்பட்டிருக்கும்.

iOS இல் IMEI எண்ணை எவ்வாறு கண்டறிவது?
– Settings-ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லவும் .
– ‘General’ என்பதை தேர்வு செய்யவும்.
– கீழே scroll செய்தால் கீழே IMEI எண் இருக்கும்.
– இதனை நகலெடுத்தோ, ஸ்க்ரீன்ஷாட் எடுத்தோ வைத்துக்கொள்ளவும்.