மொட்டை மாடியில் ரூப்டாப் சோலார் பேனல்களை நிறுவ விரும்புவோர், மத்திய அரசின் 40% மானியத்தை நேரடியாகப் பெற முடியும்.
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் (MNRE) தேசிய போர்ட்டலில் roof solar (solarrooftoppanel.gov.in) இல் ரூப்டாப் சோலார் பேனல்களுக்கு விண்ணப்பிக்க நுகர்வோர் தங்கள் ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்
MNRE விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டவுடன், மானியம் நுகர்வோரின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
மின்சார கட்டணம் 75% உயர்வு.. அதிர்ந்துபோன இலங்கை மக்கள்..!

சோலார் பேனல்
சோலார் பேனல் நிறுவலுக்கு (installation) முதலில் மக்கள் ல்லது நிறுவனங்கள் முதலில் TEDA அல்லது Tangedco அமைப்புகளைத் தான் அணுக வேண்டும், அதன் பிறகு TEDA மையத்திலிருந்து மானியம் (3 kW வரை) பெற்று விண்ணப்பதாரர்களுக்கு விநியோகிக்கும் எனத் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு ஏஜென்சி-யின் (TEDA) மூத்த அதிகாரி ஐஇ பத்திரிக்கைக்குத் தெரிவித்தார்.

புதிய அமைப்பு
ஆனால் தற்போது புதிய அமைப்பின் கீழ், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (MNRE) தான் நிறுவலுக்கான (installation) நுகர்வோரின் விவரங்களை TEDA-வுக்குத் தெரிவிக்கும் என்று TEDA) மூத்த அதிகாரி கூறினார்.

40 சதவீதம் மானியம்
மத்திய அரசு ரூப்டாப் சோலார் மானியத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 3 கிலோவாட் சோலார் பேனல்களுக்குக் கீழ் 40 சதவீதம் வரையில் மானியம் பெறலாம் முடியும். இது சாமானிய மற்றும் நடுத்தர வீடுகளுக்கும் பெரிய அளவில் பயன்படும்.

மானிய விபரங்கள்
இதேபோல் 3-10 கிலோவாட் சோலார் பேனல்களுக்கு 20% மானியம் பெறலாம், இதேபோல் குரூப் ஹவுசிங் சொசைட்டி மற்றும் குடியிருப்பு நலன்புரி சங்கங்கள் பொதுவான பயன்பாட்டுக்கான சோலார் பேனல்களைக் கொண்டு இருக்கும் வேளையில் 500 கிலோவாட் (ஒரு வீட்டிற்கு 10 கிலோவாட்) வரையிலான திட்டத்திற்கு 20% மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

3 அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள்
மாநிலத்தில் சோவார் ரூப்டாப் பேனல்களை நிறுவ பலர் விரும்பினாலும், தமிழகத்தில் மூன்று அங்கீகரிக்கப்பட்ட சோலார் பேனல் நிறுவனங்கள் மட்டுமே உள்ளதால் ஒன்றை நிறுவ குறைந்தது மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது எனக் கோயம்புத்தூர் நுகர்வோர் குரல் செயலர் என் லோகு ஐஇ பத்திரிக்கைக்குத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு ஏஜென்சி
மாநிலத்தில் இன்னும் சில சோலார் பேனல் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு ஏஜென்சி-யின் (TEDA)-க்கு வலியுறுத்தி வருகின்றனர். மாநில அரசின் ஒப்புதலைப் பெற்ற பிறகு அதற்கான நடவடிக்கைகளைத் தொடங்குவோம் என்று TEDA அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர்.
டாடா-வின் மாஸ்டர் பிளான்.. குஜராத் கார் தொழிற்சாலை-யில் என்ன செய்யபோகிறது தெரியுமா..?
40 percent subsidy for rooftop solar panels in Tamil Nadu
40 percent subsidy for rooftop solar panels in TamilNadu தமிழ்நாட்டில் சோலார் பேனல்-க்கு 40 சதவீத வரை மானியம்..!