சென்னை: செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் கமல்ஹாசன் குரலில் சுதந்திரப் போராட்டம் மற்றும் சமூக நீதி வரலாறு குறித்த நிகழ்த்துக் கலை நடனம் அனைவரையும் வியக்க வைத்தது.
சென்னை மாமல்லபுரத்தில் கடந்த 28-ம் தேதி தொடங்கி நடந்து வந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று நிறைவு பெற்றது. இதில் 186 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. நிறைவு விழா மேடையில் தமிழக முன்னாள் முதல்வர்களான ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான வரவேற்புப் பாடலில் அணிந்து இருந்த கருப்பு உடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து போர்டு பிரிவில் பதக்கம் வழங்கப்பட்டது. 5 போர்டுகளில் ஓபன், பெண்கள் என்று 30 பதக்கம் வழங்கப்பட்டன.
இதன்பிறகு கமல்ஹாசன் குரலில் சுதந்திர போராட்டம் மற்றும் சமூக நீதி வரலாறு குறித்த நிகழ்த்துக் கலை நடனம் அனைவரையும் வியக்க வைத்தது.
செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் குரலில் தமிழர்களின் பல நூறு ஆண்டுகால வரலாற்றைப் பின்னணியாக கொண்ட நிகழ்த்துக் கலை நடனம் அனைவரையும் வியக்க வைத்தது.