சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இந்த விலைக்குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இதன்படி, 12 அரை கிலோ கிராம் கேஸ் சிலிண்டரின் விலை 246 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. சிலிண்டரின் புதிய விலை நான்காயிரத்து 664 ரூபாவாகும்.
ஐந்து கிலோகிராம் கேஸ் சிலிண்டரின் விலை 99 ரூபாவால் குறைக்கப்பட்டுள்து. இதன் புதிய விலை ஆயிரத்து 872 ரூபாவாகும். 2.3 கிலோகிராம் சிலிண்டரின் புதிய விலை 859 ரூபாவாகும். இது 45 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.