குறைந்தபட்சம் ரூ.63 லட்சம் சம்பளம்.. அமெரிக்க CEO-வின் சூப்பர் அறிவிப்பு..!

பொதுவாக சிலர் எங்களது அலுவலகமும் இன்னொரு குடும்பம் என்பார்கள். ஆனால் எத்தனை பேருக்கு இந்த பாக்கியம் என்பது தெரியவில்லை. ஏனெனில் பிடித்தமான வேலை, நல்ல சம்பளம், அனுசரித்து செல்லும் ஊழியர்கள் என அமைந்தால் அது உண்மையில் சொர்க்கம் தான். ஏனெனில் பணிபுரியும் ஊழியர்கள் பலரும் தங்களது குடும்பத்தினரை அடுத்து, அதிக நேரம் இருப்பது அலுவலகத்தில் தான்.

அப்படி அலுவலகம் நம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதை போல இருந்தால் யாரும், அந்த அலுவலகத்தினை விட்டு செல்ல மாட்டார்கள்.தொடர்ந்து அலுவலகத்தில் பணி புரியவே விருப்பபடுவார்கள்.

அப்படிப்பட்ட அமெரிக்க அலுவலகம் ஒன்றில் பணிபுரிய பலரும் ஆர்வம் காட்டியுள்ளனர்.

தூங்குவதற்கு கைநிறைய சம்பளம் தரும் நிறுவனம்… போட்டி போட்டு விண்ணப்பம்!

அதிக சம்பளம்

அதிக சம்பளம்

அதிலும் தற்போது நிலவி வரும் பணவீக்கத்திற்கு எதிராக சம்பளம் அதிகமாக இருந்தால, யார் தான் வேண்டாம் என்று கூறுவார்கள். அப்படி ஒரு அமெரிக்க நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு, ஆண்டுக்கு குறைந்தபட்சம் 80 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் 63 லட்சம் ரூபாய்க்கு மேல்) என அறிவித்துள்ளது. இதனால் ஏரளாமான விண்ணப்பங்களை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.

ஏராளமான சலுகைகள்

ஏராளமான சலுகைகள்

சியாட்டலில் உள்ள கிராவிட்டி பேமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டான் பிரைஸ், தனது ஊழியர்களுக்கு 80,000 டாலர் குறைந்தபட்சம் சம்பளம், எங்கிருந்து வேண்டுமானாலும் பணிபுரியலாம். ஊதியத்துடன் பெற்றோருக்கு விடுமுறை உட்பட பல சலுகைகளையும் அறிவித்துள்ளார்.

மரியாதையுடன் நடத்துங்கள்
 

மரியாதையுடன் நடத்துங்கள்

அதோடு மற்ற நிறுவனங்களையும் நல்ல சம்பளம் வழங்கவும், சலுகைகளை வழங்கவும் டான் அழைப்பு விடுத்துள்ளார். அவர்களுக்கு நியாயமான சலுகைகளை வழங்க வேண்டும். அவர்களை மரியாதையுடன் நடத்துவது முக்கியம் என தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

ஏன் ஊழியர்கள் ஆர்வம்

ஏன் ஊழியர்கள் ஆர்வம்

எனது நிறுவனம் ஊழியர்களின் தேவையை பூர்த்தி செய்கிறது. இதனால் ஊழியர்கள் பணிபுரிய ஆர்வம் காட்டுகின்றனர். ஒரு வேலைக்கு 300-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை பெற்றுள்ளோம். பலர் இதனை சிறந்த சலுகை நினைக்கிறார்கள். பலர் தாங்கள் பணிபுரியும் நிறுவனம் இதுபோன்று வழங்கவில்லை என விமர்ச்சிக்கின்றனர். சிலர் இது அதிகம் என நினைக்கின்றனர்.

எப்படி வெற்றி கண்டது?

எப்படி வெற்றி கண்டது?

பலர் இந்த ட்வீட்டினை விமர்ச்சித்துள்ளனர். இப்படி சம்பளத்தினை வாரி வழங்கினால் நிறுவனம் வளரும் என்றும் கூறியுள்ளனர். ஆனால் அதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமான நிறுவனம் ஊழியர்களால் எப்படி முன்னேற்றம் கண்டது என்பதை டான் பிரைஸ் கூறியுள்ளார். 6 ஆண்டுகளுக்கு முன்பு இன்று எனது நிறுவனத்தின் குறைந்தபட்ச ஊதியத்தினை 70 ஆயிரம் டாலர்களாக வைத்திருந்தது.

உண்மை என்ன?

உண்மை என்ன?

எங்களின் வருவாய் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. நாங்கள் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் கேஸ் ஸ்டடி மற்றும் எங்கள் ஊழியர்கள் வாங்கிய வீடுகளில் 10 மடங்கு ஏற்றம் பெற்றுள்ளோம். ஆக எப்போதும் மக்களிடம் முதலீடு செய்யுங்கள். அதனை திரும்ப பெறுங்கள் என கூறியுள்ளார்.

அது சரி எப்படி இந்த வேலைக்கு விண்ணப்பிப்பது?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Minimum Rs.63 Lakh Salary: More than 300 applicants for 1 job

Minimum Rs.63 Lakh Salary: More than 300 applicants for 1 job/குறைந்தபட்சம் ரூ.63 லட்சம் சம்பளம்.. 1 வேலைக்கு 300 பேர்.. அமெரிக்க CEO-வின் கோரிக்கை!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.