காஷ்மீரில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலில் தமிழ்நாடைச் சேர்ந்த லட்சுமணன் வீரமரணம் அடைந்தார். இந்த செய்தி தமிழ்நாட்டு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள டி- புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தர்மராஜ் – ஆண்டாள். இவர்களுக்கு இரட்டைக் குழந்தைப் பிறந்த நிலையில் ராமர், லட்சுமணன் என்று பெயரிட்டார்கள்.
அந்த வட்டாரத்தில் பலருக்கும் ராணுவ வேலைக்குச் செல்வது லட்சியமாக இருந்த நிலையில் இவர்கள் இருவருமே ராணுவ பணி தேர்வுக்கு சென்றனர். அதில் லட்சுமணனுக்கு வேலை கிடைத்த நிலையில், ராமர் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்.
இந்நிலையில், லட்சுமணன் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தான் ராணுவப் பணியில் சேர்ந்து பணியாற்றி வந்தார். அதற்குள் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
இதுப்பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஊர்காரர்கள் தெரிவித்ததாவது, லட்சுமணன் மிகவும் துருதுருன்னு இருப்பதாகவும்,சின்ன வயசுல இருந்தே ராணுவத்தில் சேர வேண்டும் என்பது அவரின் ஆசை என்றும் அதற்கான பயிற்சியை எடுத்து அப்பணியில் சேர்ந்தார் என்றும் கூறினார்கள்.
இந்நிலையில் இரண்டு மாத லீவில் ஊருக்கு வந்த அவர் ஊரில் உள்ள பசங்களிடம் ராணுவ வேலையைப் பற்றியும், அதில் எவ்வாறு சேர வேண்டும் என்பது பற்றியும் பேசினார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் காஷ்மீருக்கு சென்றார். தினமும் அப்பா அம்மாவிடம் பேசிவிடுவார். இப்படி திடீரென ஆகும்னு எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்கள்.
தற்போது, வீர மரணமடைந்த லட்சுமணின் உடலை ஊருக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருக்கிறது. இதுக்குறித்த தமிழக அரசு இவரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி வழங்க அறிவித்துள்ளது.
இந்நிலையில்,இவரின் அண்ணன் ராமரும் ராணுவத்தில் சேர தயாராகி வருகிறார்.
இருந்தாலும் இவரின் இழப்பை ஏற்றுக்கொள்ளவும், தாங்கிக்கொள்ளவும் முடியாமல் பெற்றோர்கள் கதறி அழுகின்றனர்.
இவரின் இழப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.