ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்த வாடகை வீட்டில் குடியிருப்பவர் மாத வாடகை வழங்கும்போது ஜிஎஸ்டி வரியாக 18% செலுத்த வேண்டும் . இந்த விதிமுறையானது கடந்த ஜூலை 18ல் இருந்து அமலுக்கு வந்துள்ளது.
இந்த ஜிஎஸ்டி வரி விகிதமானது ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வர்த்தக ரீதியான அலுவலகங்கள், காலி இடங்கள் வாடகைக்கு அல்லது குத்தகைக்கு வழங்கப்பட்டால் அதற்கு வரி செலுத்த வேண்டியிருந்தது. தற்போது வீடுகளுக்கும் (ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்த வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு) கொண்டு வரப்பட்டுள்ளது.
6 லட்சம் கோடியை தொட்ட ஐசிஐசிஐ வங்கி.. எலைட் கிளப்-ல் சேர்ந்தாச்சு..!

reverse charge mechanism விதியின் கீழ் வரி
ஆனால் வீடுகள் வாடகைக்கு விடப்பட்டிருந்தால் (கார்ப்பரேட் நிறுவனங்கள் அல்லது தனி நபருக்கோ) அதற்கு வரி இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது விதிக்கப்பட்டுள்ள புதிய வரி விகிதங்களின் படி, வாடகைதாரர் ஜிஎஸ்டி பதிவு செய்திருந்தால், reverse charge mechanism விதியின் கீழ் 18% வரி செலுத்தியாக வேண்டும். இதனை வாடகைதாரர் இன்புட் டேக்ஸ் கிரெடிட் (Input Tax Credit) மூலம் கழித்துக் கொள்ளலாம்.

வாடகைதாரர்களுக்கு பிரச்சனை இல்லை
இது பதிவு செய்யப்பட்ட வாடகைதாரர்களுக்கு மட்டும் என்பதால், சாதரணமாக வாடகை வீட்டில் வசிக்கும் சம்பளதாரர்கள் மற்றும் சிறு தொழிலாளர்கள் உள்ளிட்ட வாடகை தாரர்களுக்கு இதனால், எந்த பிரச்சனையும் இல்லை எனலாம். அவர்கள் வரி செலுத்த வேண்டியதும் இல்லை.

செலவு அதிகரிக்கும்
ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர் , வாடகைக்கு எடுத்து அதன் மூலம் சேவை செய்யும்போது 18% வாடகை வரியாக, செலுத்த வேண்டும்.
ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த முடிவால் நிறுவனங்கள் சற்று தாக்கத்தினை எதிர்கொள்ளலாம். தங்களது பணியாளர்களுக்காக வீடுகளை மாத வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ எடுத்தால் அதற்கு வரி செலுத்த வேண்டியிருக்கும். இதனால் நிறுவனங்களின் செலவினங்கள் அதிகரிக்கும்.

சலுகைகள் குறையலாம்
அப்படி ஊழியர்களுக்காக சலுகை செய்யும் நிறுவனங்கள், அதற்காக செலுத்தப்படும் வாடகைக்கு 18% வரி செலுத்த வேண்டியிருக்கும். இது நிறுவனங்கள் இலவசமாக தங்கும் ஊழியர்களுக்கு சலுகைகளையும் குறைக்க வழிவகுக்கலாம்.
GST on rentals? Registered tenants to pay 18% on rent
GST on rentals? Registered tenants to pay 18% on rent/வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு ஜிஎஸ்டியா? உண்மை நிலவரம் என்ன?