குழந்தைகள் ஏதேனும் ஒரு விஷயத்தினை செய்தால், அதனை குழந்தையாய் ரசிக்கும் பெற்றோர்கள் இன்றும் இருக்கின்றனர். அவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்தினை கொண்டாடுவர். அதிலும் சில பெற்றோர் அந்த குழந்தைகள் பெரியவர்கள் ஆகி ஏதேனும் சாதனை படைத்தாலும் கூட ,அதே உற்சாகத்தினை குழந்தைகளிடம் காட்டுவதை பார்த்திருக்கலாம்.
பெரியவர் ஆனால் என்ன? சிறு வயது குழந்தைகளாக இருந்தால் என்ன? பெற்றோருக்கு தங்களது வாரிசுகள் என்றுமே குழந்தைகள் தானே.
அப்படி ஒரு பாசமிகு தாய் தனது பெண் குழந்தையின் மீது கொண்ட அளவு கடந்த பாசத்தினை வெளிப்படுத்த என்ன செய்திருக்கிறார் தெரியுமா?
சுதந்திரத்திற்கு முன் உருவாகிய மாபெரும் வர்த்தக 7 சாம்ராஜியங்கள்..!
 
 மகளை கெளரவிக்கணும்
கேந்திரா பஸ்பீ என்ற தாய், தனது மகள் சைக்காலஜியில் பட்டம் பெற்ற நிலையில் அவரால் பெருமைபட முடியவில்லையாம். ஆனால் இந்த நல்ல விஷயத்தினை எப்படியாவது கொண்டாடியே ஆக வேண்டும் என்று, அமெரிக்காவின் நியூஜெர்சியை சேர்ந்த பஸ்பீ, தனது மகள் கிறிஸ்டின் ஸ்மால்ஸை கெளரவிக்க ஒரு பிரம்மாதமான முடிவினை எடுத்துள்ளார்.
 
 டிஜிட்டல் விளம்பர பலகை
தனது மகளை கெளரவிக்கும் விதமாக ஒரு டிஜிட்டல் விளம்பர பலகையை வாடகைக்கு எடுக்க முடிவு செய்துள்ளார். ஏனெனில் இது அந்த பாசமிகு தாயாரின் மிகவும் எதிர்பார்த்த முக்கியமான நெகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று. ஆக அதனை கொண்டாடமல் இருக்க முடியுமா?
 
 ரூ.98,958 செலவா?
அதற்காக பஸ்பீ 1250 டாலர்கள் (இந்திய மதிப்பில் 98,958 ரூபாய்) செலுத்தி, விளம்பர பலகையில் தனது மகளின் புகைப்படத்துடன் கூடிய ஒரு விளம்பர பலகையை வைக்கிறார். இதனை கேம்டனுக்கு அருகில் உள்ள விமான நிலைய வட்டத்திற்கு அருகில் உள்ள பாதை 130ல் வைத்துள்ளார்.
 
 பேஸ்புக்கில் பகிர்வு
இதன் முன் நின்ற படத்தையும் தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அதில் நீ என் ஓளிரும் நட்சத்திரமாக இருக்க வேண்டும். நீ எங்கிருந்தாலும் ஜொலிக்க போகிறாய். நான் பெருமைமிக்க அம்மா. ஐ லவ் யூ டாக்டர் கிறிஸ்டின் எஸ் ஸ்மால்ஸ் என்றும் அதற்கு கேப்சனும் கொடுத்து அதனை மிகுந்த நெகிழ்ச்சியுடன் பகிர்துள்ளார்.
 
 உத்வேகத்தினை கொடுக்கும்
இதனை கண்டு ஆச்சரியமடைந்த மகள், பொதுவாக எனக்கும், என் சகோதரனுக்கும் மேலாக, நாங்கள் எந்த வகையான சாதனையை செய்தாலும், எங்களது அம்மா எங்களையே மிஞ்சிவிடுகிறார் என்று பாசம் பொங்க கூறியுள்ளார்.
இது குறித்து பஸ்பீ இது என் மகளை கெளரவிக்கும் விதமாக மட்டும் அல்ல, இது இளைஞர்களை சாதிக்க ஊக்குவிக்கிறது. இது குழந்தைகளுக்கு ஒரு உத்வேகத்தினை கொடுக்கும் என கூறியுள்ளார்.
American mother spends Rs 98,958 on digital billboard to honor her daughter
American mother spends Rs 98,958 on digital billboard to honor her daughter/மகளை கெளரவிக்க ரூ.98,958 செலவு செய்த தாய்.. அமெரிக்க தாயின் நெகிழ்ச்சி தருணம்!
