காதல் வதந்தி கசப்பில் முடிந்தது; பெயர், புகழுக்காக பொய் சொல்லும் நடிகை: ரிஷப் பன்ட் பதிவால் ஊர்வசி ரவுடேலா கடுப்பு

மும்பை: ரிஷப் பன்ட் – ஊர்வசி ரவுடேலா இடையிலான காதல் புகைச்சல் தற்போது மோதலில் முடிந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனும், இந்திய அணி கிரிக்கெட் வீரருமான ரிஷப் பன்ட் – பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா ஆகிய இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் உலாவி வருகின்றன. முன்னதாக, தொலைக்காட்சி நேர்காணலில் பேட்டியளித்த ஊர்வசி: ஆர்பி (ரிஷப் பன்ட்) என்ற நபர் என்னைப் பார்ப்பதற்காக ஓட்டல் லாபியில் பல மணி நேரம் காத்திருந்தார்’ என்று கூறினார். இவர் ஆர்பி என்று குறிப்பிட்டது ரிஷப்பைத்தான் என்று பலரும் கருத்துகளை கூறிவந்தனர். இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் ரிஷப் பன்ட் வெளியிட்ட பதிவில், ‘சிலர் புகழுக்காகவும், பெயருக்காவும் அற்ப செய்திகளை வெளியிடுகின்றனர். நேர்காணல்களில் எப்படியெல்லாம் பொய் சொல்கிறார்கள் பாருங்கள். இது மிகவும் வேடிக்கையாக உள்ளது. புகழுக்காகவும் பெயருக்காகவும் அவர்கள் ஏங்குவது எனக்கு வருத்தமாக இருக்கிறது.  கடவுள் அவர்களை ஆசீர்வதிப்பாராக’ என்று பதிவிட்டிருந்தார். சில மணி நேரங்களில் அந்த டுவிட்டர் பதிவை நீக்கிவிட்டார். மேலும், என்னை தனியாக  விடுங்கள் சகோதரி. பொய்களுக்கும் ஒரு  வரம்பு உண்டு என்ற ஹேஷ்டேக்கை இணைத்திருந்தார். இருவருக்கும் இடையே மோதல் அதிகரித்த நிலையில் நேற்றிரவு ஊர்வசி வெளியிட்ட பதவில், ‘இளைய சகோதரரே நீங்கள் கிரிக்கெட் விளையாடுங்கள். அவதூறு செய்ய நான் ஒன்றும் அப்பாவி பெண் இல்லை. உங்களது விளம்பரத்துக்கு அமைதியான பெண்ணைப் பயன்படுத்திக் கொள்ளாதீர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.