- 8 பகுதிகளை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்தது பிரித்தானிய அரசு
- வறண்ட காலநிலைக்கு முன்னெப்போதையும் விட நாங்கள் தயாராக இருக்கிறோம் நாட்டின் நீர் அமைச்சர் ஸ்டீவ் டபுள் அறிவிப்பு
மத்திய, கிழக்கு மற்றும் தெற்கு பிரித்தானியாவில் மொத்தமுள்ள 14 இடங்களில் 8 பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுள்ளதாக நாட்டின் நீர் அமைச்சர் ஸ்டீவ் டபுள் வெள்ளியன்று அறிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் வரலாற்று காணாத அளவிற்கு இந்த ஆண்டு அதிகரித்து காணப்பட்ட வெப்ப அலைகளின் அடுத்தடுத்த தாக்கம் நாட்டில் பெரும் இன்னல்களை ஏற்படுத்தியுள்ளது.
EPA
அந்தவகையில் பிரித்தானியாவில் அதிக பாதித்த பகுதிகளை வறட்சி பகுதிகளாக அரசாங்கம் வெள்ளிகிழமையான இன்று அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமார் 8 பகுதிகளை வறட்சி பாதித்த பகுதிகளாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
1)டெவன் மற்றும் கார்ன்வால் 2)சோலண்ட் மற்றும் சவுத் டவுன்ஸ் 3)கென்ட் மற்றும் தெற்கு லண்டன் 4)ஹெர்ட்ஸ் மற்றும் வடக்கு லண்டன் 5)கிழக்கு ஆங்கிலியா 6)தேம்ஸ் 7)லிங்கன்ஷயர் மற்றும் நார்தாம்ப்டன்ஷைர் 8)கிழக்கு மிட்லாண்ட்ஸ் ஆகிய 8 பகுதிகளை வறட்சி பாதித்த பகுதியாக அரசு அறிவித்துள்ளது.
மேலும் இந்த மாத இறுதியில் மேலும் இரண்டு பகுதிகள் வறட்சிக்குள் நுழையக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Sky News
அரசின் அறிவிப்பை தொடர்ந்து இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் உள்நாட்டு மற்றும் வணிக ரீதியான தண்ணீரைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகளை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுத் குறித்து பிரித்தானியாவின் நீர் அமைச்சர் ஸ்டீவ் டபுள் தெரிவித்த அறிவிப்பில், அத்தியாவசிய பொருட்கள் இன்னும் பாதுகாப்பாக உள்ளன என்று அனைத்து நீர் நிறுவனங்களும் எங்களுக்கு உறுதியளித்துள்ளன எனத் தெரிவித்தார்.
Sky News
கூடுதல் செய்திகளுக்கு: படகு கிளப்பில் கரை ஒதுங்கிய ஆண் சடலம்…மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரித்தானிய பொலிஸார்
அத்துடன் வறண்ட காலநிலைக்கு முன்னெப்போதையும் விட நாங்கள் தயாராக இருக்கிறோம், ஆனால் விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் போன்றவை தொடர்பான நிலைமையை நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து மேலும் நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவித்தார்.