ஷீரடி: மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு ஆந்திராவைச் சேர்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ரூ.36.98 லட்சம் செலவில் தங்க கிரீடத்தை காணிக்கையாக வழங்கினார்.
ஆந்திர மாநிலம், பாபட்லா சட்டப் பேரவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரான அன்னம் சதீஷ் பிரபாகர் தீவிர ஷீரடி சாய்பாபா பக்தராவார்.
இவர், ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, நேற்றுமுன் தினம், மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்று, 770 கிராம் எடையுள்ள ரூ. 36.98 லட்சம் மதிப்பிலான தங்க கிரீடத்தையும், 620 கிராம் எடையுள்ள ரூ. 33 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி தாம்பாள தட்டையும் சுவாமிக்கு காணிக்கையாக வழங்கினார்.
சமீபத்தில் ஹைதராபாத்தை சேர்ந்த டாக்டர் ராமகிருஷ்ணா (80) என்பவர் ஷீரடி சாய்பாபாவுக்கு ரூ.33 லட்சத்தில் தங்க கிரீடம் வழங்கினார் என ஷீரடி தேவஸ் தானத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாக்யஸ்ரீ பனாயத் தெரிவித்தார்.