SIIMA Awards 2022…தமிழில் 2021 ல் சிறந்த நடிகை யார்…பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்த 5 பேர்

சென்னை : தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் சைமா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.

தென்னிந்திய திரைப்படங்களையும், அதில் பணியாற்றுபவர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் கெளரவிக்கும் விதமாக சைமா விருதுகள் (South Indian International Movie Awards) 2012 ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு, ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் சினிமா கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக முக்கியமான விருதுகளில் ஒன்றாக சைமா விருது கருதப்படுகிறது. மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு மொழி சினிமாக்களுக்கு இது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மொழியிலும் சிறந்த திரைப்படம், இயக்குநர், நடிகர், நடிகை, இசையமைப்பாளர், துணை கதாபாத்திரங்கள் என பல பிரிவுகளில் சைமா விருதுகள் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு சைமா விருது வழங்கும் விழா ஐதராபாத்தில் நடத்தப்பட்டது.

சைமா விருது விழா எப்போ

இந்நிலையில் இந்த ஆண்டு சைமா விருதுகள் வழங்கும் விழா செப்டம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சைமா விருதுகள் அறிமுகம் செய்யப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைவதால் இந்த ஆண்டு நடக்கும் விழாவை கோலாகலமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.

பரிந்துரை பட்டியல் வெளியிடும் சைமா

பரிந்துரை பட்டியல் வெளியிடும் சைமா

இந்நிலையில் சைமா, இந்த ஆண்டு ஒவ்வொரு மொழியிலும், ஒவ்வொரு பிரிவிற்கும் பரிந்துரைக்கப்பட்ட படங்கள், கலைஞர்களின் பட்டியலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. தமிழில் பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியலும் வெளியிட்டுள்ளது.

தமிழில் சிறந்த படம் எது?

தமிழில் சிறந்த படம் எது?

2021 ம் ஆண்டு தமிழில் வெளியான சிறந்த படத்திற்கான விருதிற்கு

டாக்டர்

சார்பட்டா பரம்பரை

கர்ணன்

மாநாடு

தலைவி

மண்டேலா

ஆகிய 6 படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. 2021 ம் ஆண்டிற்கான விருதுகள் பிரிவில் அதிகபட்சமாக கர்ணன் படம் 10 பிரிவுகளுக்கும், டாக்டர் படம் 9 பிரிவுகளுக்கும், மாஸ்டர் 7 பிரிவுகளுக்கும், தலைவி 7 பிரிவுகளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

சிறந்த நடிகருக்கான பரிந்துரை பட்டியல்

சிறந்த நடிகருக்கான பரிந்துரை பட்டியல்

நேற்று தமிழில் 2021 ல் சிறந்த நடிகர் லீட் ரோல் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியலை சைமா வெளியிட்டுள்ளது. இதில்

ஆர்யா (சார்பட்டா பரம்பரை),

தனுஷ் (கர்ணன்),

விஜய் (மாஸ்டர்),

சிலம்பரசன் (மாநாடு),

சிவகார்த்திகேயன் (டாக்டர்),

சூர்யா (ஜெய்பீம்) ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

சிறந்த நடிகை பரிந்துரை பட்டியலில் 5 பேர்

சிறந்த நடிகை பரிந்துரை பட்டியலில் 5 பேர்

இந்நிலையில் இன்று 2021 ம் ஆண்டிற்கான தமிழில் சிறந்த நடிகை லீட் ரோல் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியலை சைமா வெளியிட்டுள்ளது. இதில்,

கங்கனா ரணாவத் (தலைவி),

நயன்தாரா (நெற்றிக்கண்),

ஜோஸ் லீஜோமோல் (ஜெய்பீம்),

கீர்த்தி பாண்டியன் (அன்பிற்கினியாள்),

ஐஸ்வர்யா ராஜேஷ் (திட்டம் இரண்டு) ஆகிய 5 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

ரசிகர்களின் தேர்வு யார்?

ரசிகர்களின் தேர்வு யார்?

ரசிகர்கள் ஒவ்வொரு பிரிவிலும் தங்களுக்கு விருப்பமானவர்களை தேர்வு செய்வதற்காக ஆன்லைனில் ஓட்டளிக்கும் வாய்ப்பை சைமா உருவாக்கி உள்ளது. ரசிகர்கள் அளிக்கும் ஓட்டுக்களில் அடிப்படையிலேயே சைமா விருது வழங்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.