மும்பை
:
நடிகை
ஆலியா
பட்
ஸ்டூடண்ட்
ஆப்
தி
இயர்
படத்தின்
மூலம்
திரைத்துறையில்
என்ட்ரி
கொடுத்தவர்.
தற்போது
பாலிவுட்டின்
முன்னணி
நடிகையாக
மாறியுள்ளார்.
சமீபத்தில்
வெளியான
ஆர்ஆர்ஆர்
படத்திலும்
இவர்
நடித்திருந்தார்.
இந்தப்
படம்
தெலுங்கில்
உருவான
நிலையிலும்
பான்
இந்தியா
படமாக
வெளியானது.
சமீபத்தில்
ரன்பீர்
கபூருடன்
இவருக்கு
திருமணம்
நடைபெற்ற
நிலையில்
தற்போது
ஆலியா
கர்ப்பமாக
உள்ளார்.
நடிகை
ஆலியா
பட்
நடிகை
ஆலியா
பட்
சிறுமியாக
சில
பாலிவுட்
படங்களில்
நடித்திருந்தாலும்
நாயகியாக
ஸ்டூடண்ட்
ஆப்
தி
இயர்
படத்தில்
சிறப்பான
என்ட்ரியை
கொடுத்தார்.
கரண்
ஜோஹர்
இயக்கத்தில்
இந்தப்
படம்
வெளியாகி
ஆலியாவிற்கு
நல்ல
அறிமுகத்தை
கொடுத்திருந்தது.
பாலிவுட்டில்
நல்ல
வசூலையும்
பெற்றுக்
கொடுத்தது.

பிரபல
இயக்குநர்
மகேஷ்
பட்
மகள்
பிரபல
இயக்குநர்
மற்றும்
தயாரிப்பாளர்
மகேஷ்
பட்
மற்றும்
பிரிட்டீஷ்
நடிகை
சோனி
ரஸ்தானுக்கு
பிறந்த
ஆலியா
பட்
தொடர்ந்து
நல்ல
கதைக்களங்களை
தேர்ந்தெடுத்து
நடித்தார்.
டூ
ஸ்டேட்ஸ்,
ஹைவே,
உப்தா
பஞ்சாப்,
ராசூ,
குல்லி
பாய்
போன்ற
பல
படங்கள்
இவரை
பாலிவுட்டின்
முன்னணி
நடிகையாக
மாற்றியது.

சிறந்த
பாடகி
இவரது
நடிப்பில்
சமீபத்தில்
வெளியான
கங்குபாய்
காய்த்வாடி
படமும்
நல்ல
விமர்சனங்களை
ஆலியா
பட்டிற்கு
பெற்றுத்
தந்துள்ளது.
இம்தியாஸ்
அலியின்
ஹைவே
படத்தில்
இவர்கள்
சிறப்பான
பாடகியாகவும்
நடிகையாகவும்
அறியப்பட்டார்.
இந்தப்
படத்திற்கு
ஏஆர்
ரஹ்மான்
இசையமைத்திருந்தார்.

ஆர்ஆர்ஆர்
படத்தின்
கேரக்டர்
சமீபத்தில்
வெளியான
ராஜமௌலியின்
ஆர்ஆர்ஆர்
படத்திலும்
டார்லிங்
படத்திலும்
நடித்து
நல்ல
பெயரை
பெற்றுள்ளார்
ஆலியா.
கடந்த
ஏப்ரல்
மாதத்தில்
ரன்பீர்
கபூரை
இவர்
திருமணம்
செய்துக்
கொண்டார்.
இவர்களது
திருமணம்
காதல்
திருமணம்.
கொரோனா
சூழலில்
இவரது
குடும்பத்தினர்
மற்றும்
திரையுலக
பிரபலங்கள்
மட்டுமே
இதில்
கலந்துக்
கொண்டனர்.

திருமணம்
+
கர்ப்பம்
இந்நிலையில்
கடந்த
சில
வாரங்களுக்கு
முன்பு
தன்னுடைய
கர்ப்பத்தை
அறிவித்த
ஆலியா,
தொடர்ந்து
கர்ப்பகால
புகைப்படங்களை
வெளியிட்டு
வருகிறார்.
இவர்
தன்னுடைய
கணவர்
ரன்பீர்
கபூர்,
அமிதாப்பச்சன்
ஆகியோருடன்
இணைந்து
நடித்துள்ள
பிரம்மாஸ்திரா
படம்
வரும்
செப்டம்பர்
9ம்
தேதி
ரிலீசாக
உள்ளது.

கர்ப்பகால
புகைப்படங்கள்
தொடர்ந்து
ரன்வீர்
சிங்குடன்
இணைந்து
ராக்கி
அவுர்
ராணி
கி
பிரேம்
கஹானி
படத்திலும்
ஆலியா
நடித்து
வருகிறார்.
இந்நிலையில்
இன்றைய
தினம்
மீண்டும்
தனது
கர்ப்பத்துடன்
போட்டோஷுட்
எடுத்து
அதன்
புகைப்படங்களை
இன்ஸ்டாகிராமில்
வெளியிட்டுள்ளார்
ஆலியா.
பிரம்மாஸ்திரம்
படத்தின்
ரிலீசையொட்டி
இந்த
போட்டோஷுட்டை
அவர்
எடுத்து
வெளியிட்டுள்ளார்.

2
வாரங்களில்
வெளிச்சம்
தொடர்ந்து
இன்னும்
இரு
வாரங்களில்
வெளிச்சம்
வரவுள்ளதாகவும்
பதிவிட்டுள்ளார்.
கர்ப்பகால
புகைப்படத்துடன்
இந்த
கேப்ஷனை
வெளியிட்ட
நிலையில்,
அவருக்கு
குழந்தை
பிறப்பதைதான்
அவர்
குறிப்பிட்டுள்ளாரோ
என்று
ரசிகர்கள்
குழப்பமடைந்த
நிலையில்,
பிரம்மாஸ்திரா
என்று
அவரே
குறிப்பிட்டுள்ளார்.