100 ரூபாய் பேடிஎம் பணப்பரிமாற்றம்.. ரூ.4 கோடி நகை கொள்ளையை கண்டுபிடித்த போலீஸ்!

100 ரூபாய் பேடிஎம் மூலம் பணபரிமாற்றம் செய்ததை அடுத்து நான்கு கோடி ரூபாய் நகைக கொள்ளையை போலீசார் கண்டுபிடித்து சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் நகை கொள்ளையில் ஈடுபட கொள்ளையர்களில் ஒருவன் நூறு ரூபாய் கொடுத்து தேநீர் குடித்துவிட்டு டிஜிட்டல் மூலம் பணபரிமாற்றம் செய்துள்ளார்.

சிசிடிவி மூலம் இதனை கண்டுபிடித்த போலீசார் அதை வைத்து துப்பு துலக்கி ஒட்டுமொத்த கும்பலை பிடித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் பிரபல வங்கி.. அதிர்ச்சியில் ஊழியர்கள்!

நகைக்கொள்ளை

நகைக்கொள்ளை

மத்திய டெல்லி பகுதியில் கடந்த புதன்கிழமை அதிகாலையில் நான்கு பேர் போலீஸ் வேடமிட்டு கூரியர் நிறுவன நிர்வாகிகளை அடித்துப் போட்டு ரூ.4 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துள்ளனர். நகைகள் உள்பட மதிப்பு மிக்க பொருட்களை அனுப்பும் கூரியர் சர்வீஸ் நிறுவனத்தின் இந்த கொள்ளையில் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

சிசிடிவி காட்சி

சிசிடிவி காட்சி

இது குறித்து காவல்துறையில் புகார் செய்யப்பட்ட நிலையில் அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை இந்த கொள்ளை நடந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளை குறித்து புலன் விசாரணை செய்தனர்.

டிஜிட்டல் பணப்பரிமாற்றம்
 

டிஜிட்டல் பணப்பரிமாற்றம்

அப்போது அதிகாலை 4.30 மணி அளவில் கொள்ளையர்களில் ஒருவன் தேநீர் கடைக்குச் சென்று தேநீர் குடித்துவிட்டு பணத்திற்கு பதிலாக 100 ரூபாய் டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தேநீர் கடை

தேநீர் கடை

இதனை அடுத்து அந்த தேநீர் கடை உரிமையாளரை காவல்துறையினர் விசாரித்தபோது அந்த நபர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதை அடுத்து டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்ததாக கூறினார். இதனை அடுத்து தேநீர் கடைக்காரர் வங்கி கணக்கை ஆய்வு செய்த போலீசார் எந்த வங்கி கணக்கில் இருந்து பேடிஎம் மூலம் தேநீர் கடைக்காரருக்கு 100 ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது என்பதை கண்டுபிடித்தனர்.

கொள்ளையர் கண்டுபிடிப்பு

கொள்ளையர் கண்டுபிடிப்பு

இதனை வைத்து அந்த கொள்ளையன், அவனுடைய முகவரி, மொபைல் போன் உள்ளிட்டவற்றை கண்டுபிடித்த போலீசார் கொள்ளையன் முகவரிக்கு சென்று கொள்ளையனை கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட கொள்ளையனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மற்ற கொள்ளையர்களும் பிடிபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொள்ளையர்களில் ஒருவன் நூறு ரூபாய் பேடிஎம் மூலம் பணபரிமாற்றம் செய்ததை அடுத்து 4 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு மிகப்பெரிய கொள்ளை துப்பு துலங்கியுள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Rs 100 Paytm Transaction Helps Delhi Police Solve Rs 4 Crore Jewellery Robbery Case!

Rs 100 Paytm Transaction Helps Delhi Police Solve Rs 4 Crore Jewellery Robbery Case! | 100 ரூபாய் பேடிஎம் பணப்பரிமாற்றம்.. ரூ.4 கோடி நகைக்கொள்ளையை கண்டுபிடித்த போலீஸ்!

Story first published: Friday, September 2, 2022, 20:35 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.