கடனில் தொடங்கிய இந்த நிறுவனத்தின் மதிப்பு இன்று ரூ.77,450 கோடி..!

டெல்லி: கனடாவில் தனது உயர் படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய ராகுல் பாட்டியாக்கு சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்பது கனவு.

தனது தந்தை ஒரு டிராவல் முகவாண்மை நடத்தி வந்தாலும் அதையே செய்ய அவருக்கு விருப்பம் இல்லை. எனவே சொந்தமாக பல்வேறு தொழில்களைத் தொடங்கியும் எதிலும் வெற்றி இல்லை.

அந்த நேரத்தில் தனது தந்தையின் உடல் நலம் சரியில்லாமல் போனதால், குடும்பச் சூழல் காரணமாகத் தனது தந்தையின் வணிகத்தைத் தொடர ஆரம்பிக்கிறார்.

இன்டர்குளோப் எண்டர்பிரைசஸ்

பின்னர் அந்த நிறுவனத்தின் பெயரை இன்டர்குளோப் எண்டர்பிரைசஸ் என மாற்றம் செய்து விமான சீட்டுகளையும் விற்பனை செய்யும் நிறுவனமான மாற்றுகிறார். அப்படியே அதில் நீண்ட காலம் பயணித்த ராகுலுக்கு நாம் ஏன் சொந்தமாக விமான நிறுவனம் தொடங்கக் கூடாது என எண்ணம் தோன்றுகிறது.

பிற விமான நிறுவனங்கள்

பிற விமான நிறுவனங்கள்

அந்த நேரத்தில் ஜெட் ஏர்வேஸ்ம் கிங் பிடர், ஸ்பைஸ் ஹெட் போன்ற விமான நிறுவனங்கள் பெரும் அளவில் விமான போக்குவரத்து சேவை மூலம் பெரும் பணத்தை ஈட்டி வந்தன.

 முதலீடு
 

முதலீடு

விமான நிறுவனம் தொடங்குவதற்கான முதலீட்டைப் பெற அமெரிக்காவில் உள்ள தனது நண்பர் ராகேஷ் கங்வாலை தொடர்பு கொண்டு தனது எண்ணத்தைப் பகிர, அவரும் அதற்கு விருப்பம் தெரிவிக்கிறார். அப்படி 2004-ம் ஆண்டு இன்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனம் தொடங்கப்படுகிறது.

முழுமையாகக் கடன்

முழுமையாகக் கடன்

விமான நிறுவனம் தொடங்கப்பட்டாலும் இந்த நிறுவனம் முழுமையாகக் கடனிலேயே தொடங்கப்பட்டது என்பது தான் ஆச்சரியமான தகவல். விமானங்களைக் கூட கடனில் தான் வாடகைக்கு வாங்கியது. இண்டிகோ விமானச்சேவை தொடங்கப்பட்ட ஒரு ஆண்டில் நல்ல பெயர் கிடைக்க முதல் சொந்த விமானத்தை 2006-ம் ஆண்டு வாங்கியது.

 ஏர்பஸ்

ஏர்பஸ்

ஏர்பஸ் நிறுவனம் 100 விமானங்களைக் கடனில் வழங்கியது. 2011-ம் ஆண்டு எல்லோருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாக இண்டிகோ நிறுவனம் 180 ஏர்பஸ் விமானங்களை ஆர்டர் செய்தது.

 இந்தியாவின் நம்பர் 1 விமான போக்குவரத்து நிறுவனம்

இந்தியாவின் நம்பர் 1 விமான போக்குவரத்து நிறுவனம்

பின்னர் வெளிநாடு விமானச் சேவைகளை வழங்கத் தொடங்கியது. இன்று இந்தியாவிலிருந்து அதிகளவில் வெளிநாட்டு விமானச் சேவையை வழங்கும் நிறுவனமாக இண்டிகோ உருவாகியுள்ளது. 275 விமானங்களுடன் 73 உள்நாட்டு மற்றும் 24 வெளிநாட்டு வழித்தடங்களில் இண்டிகோ விமானச் சேவையை வழங்கி வருகிறது.

சந்தை மதிப்பு

சந்தை மதிப்பு

இந்தியாவின் நம்பர் 1 பயணிகள் விமானச் சேவை வழங்கும் நிறுவனமாக உருவாகியுள்ள இண்டிகோவின் தற்போதைய சந்தை மதிப்பு 77,473.11 கோடி ரூபாயாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Success Story Of Indigo’s InterGlobe Aviation

Success Story Of Indigo’s InterGlobe Aviation | கடனில் தொடங்கிய இந்த நிறுவனத்தின் மதிப்பு இன்று ரூ.77,450 கோடி..!

Story first published: Saturday, September 3, 2022, 9:35 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.