ஆசிரியர்களை சுதந்திரமாக செயல்படவிட்டாலே மாணவர்களின் எதிர்காலத்தை மேலும் வளப்படுத்தி விடுவார்கள் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பா் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியா் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பேசியதாவது,
ஆசிரியர்களை சுதந்திரமாக செயல்பட்டாலே மாணவர்களின் எதிர்காலத்தை மேலும் வளப்படுத்திவிடுவார்கள். தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைக்கூட பொருட்படுத்தாமல் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
மாணவர்களின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் வகையில் ஒரு சிறந்த உறவாக ஆசிரியர்களின் பணி அமைந்துள்ளது. ஆசிரியர்களின் கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு காணப்படும் என கூறியுள்ளார்.