லாகூர்,
பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூலை தொடங்கிய பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அதேபோல், இமயமலையில் பனிப்பாறை உருகி வருகிறது.
இதன் காரணமாக நாட்டில் பல்வேறு நகரங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் 3-ல் 1 பங்கு தண்ணீரில் மூழ்கியுள்ளதாக பாகிஸ்தான் பருவநிலைமாற்ற மந்திரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,325 ஆக அதிகரித்துள்ளது.
வெள்ளம், கனமழை காரணமாக நாடு முழுவதும் 3.3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16.88 லட்சம் வீடுகள் அழிந்துள்ளது/சேதமடைந்துள்ளன என அந்நாட்டு தேசிய பேரிடம் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
கனமழை, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பாதுகாப்பு படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.