புதுடெல்லி: ஜனாதிபதியாக இருந்த ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் கடந்த ஜூலையில் முடிந்தது. ஓய்வுக்குப் பிறகு அவருக்கு டெல்லியில் வீடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உளவுத்துறைகளின் பரிந்துரையின் அடிப்படையில் கோவிந்த்துக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க, ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதனை தொடர்ந்து, கடந்த 5ம் தேதி முதல் அவருக்கு பாதுகாப்பு வழங்கும் பொறுப்பை துணை ராணுவ படையினர் ஏற்றுள்ளனர். நாட்டின் எந்த பகுதிக்கு அவர் சென்றாலும் ஆயுதம் ஏந்திய ரிசர்வ் போலீஸ் படையின் விஐபி பாதுகாப்பு கமாண்டோ பிரிவினர் பாதுகாப்பு அளிப்பார்கள். மத்திய டெல்லியில் ஜன்பத் சாலையில் அமைந்துள்ள கோவிந்த் வீட்டிற்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.