மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 5 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பிலான 12 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகரிகள் பறிமுதல் செய்தனர்.
சூடான் பயணி ஒருவரை சோதனை செய்தபோது அவர் அணிந்திருந்த பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பெல்ட்டில் தலா ஒரு கிலோ மதிப்புள்ள 12 தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அப்போது அவரை தப்புவிப்பதற்காக பயணிகள் 6 பேர் அங்கு சலசலப்பை ஏற்படுத்தியதையடுத்து அவர்களையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைதுசெய்தனர்.