கேரள மாநிலம் கண்ணூர் அருகே காட்டு யானை துரத்தியதால் உயிருக்கு அஞ்சி 2 மணி நேரத்திற்கு மேலாக மரத்தின் மீது ஏறி வனத்துறையினர் பரிதவித்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
ஆராளம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த வனத்துறையினரை காட்டு யானை ஒன்று திடீரென துரத்தியது.
இதனால் உயிருக்கு அஞ்சி ஓடிய அந்த வன ஊழியர்கள் அங்கிருந்த மரத்தின் மீது ஏறி அமர்ந்து உயிர் தப்பினர். பின்னர் காட்டு யானை அங்கிருந்து நகர்ந்த பின்னரே வனத்துறையினர் மரத்தில் இருந்து கீழே இறங்கினர்.