
சூப்பர் குட் பிலிம்ஸின் 100வது படத்தில் விஜய் : ஜீவா தகவல்
தமிழ் சினிமாவின் தயாரிப்பு நிறுவனங்களில் பிரபலமான ஒன்று சூப்பர் குட் பிலிம்ஸ். இதன் உரிமையாளரான ஆர்.பி.சவுத்ரி தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பல படங்களை தயாரித்து வருகிறார். விரைவில் இந்த நிறுவனம் தன் 100வது படத்தை தயாரிக்க உள்ளது. இந்நிலையில் ஆஹா ஓடிடி தளத்திற்காக சர்க்கார் வித் ஜீவா என்ற நிகழ்ச்சியை வழங்கவிருக்கிறார் ஜீவா. இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசும்போது ”சூப்பர் குட் பிலிம்ஸ் 100வது படத்தில் விஜய் நடிக்க வாய்ப்பு உள்ளது. அவரிடம் பேசி உள்ளோம். கடவுளின் ஆசீர்வாதம் கிடைத்தால் அவர் நடிப்பார். அந்த படத்தில் கதை அமைந்தால் நானும் உடன் நடிப்பேன்” என்றார்.
ஏற்கனவே இந்நிறுவனம் தயாரித்த பூவே உனக்காக, லவ்டுடே, துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜகான், திருப்பாச்சி, ஜில்லா ஆகிய படங்களில் விஜய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.