மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் அறிவித்தல்

ஆறு மாத காலத்திற்கு செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரத்தை ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகக் கூடியதாக நீடிப்பதற்குத் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவிக்கையில்,
இதற்காக தாம்; பதிவுசெய்துள்ள மாவட்டத்தின் மாவட்ட செயலகத்திற்கு அல்லது கொழும்பிலுள்ள வேரஹெர அலுவலகத்திற்குச் சமூகமளித்து, ஆறு மாத செல்லுபடிக் காலத்தை ஒரு வருட காலமாக நீடித்துப் பெற்றுக்கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளது.

தற்போது மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்திற்குச் சொந்தமான சாரதி அனுமதிப்பத்திரத்தை வெளிநாட்டிற்குச் செல்லும் புதிய அனுமதிப்பத்திரம் பெற்றுள்ளவர்களுக்கு மாத்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அச்சிடப்பட்ட 450,000 அனுமதிப்பத்திரங்கள் எதிர்வரும் சில வாரங்களுக்குள் இந்நாட்டிற்கு கிடைக்கும் என திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

அவுஸ்திரேலிய நிறுவனமொன்றிடம் முன்வைக்கப்பட்ட பெறுகை கோரிக்கைக்கு அமைவாக இவை கிடைக்கவுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.