நாட்டில் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவதில் இன்ஜினியர்களின் பணி மகத்தானது. எந்த ஒரு பணியிலும் பொறியாளர்களின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது. இந்தியாவின் புள்ளியியல் நிபுணர், சிவில் இன்ஜினியருமான கர்நாடகாவின் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த தினமான செப்., 15 தேசிய இன்ஜினியர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 1955ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. மத்திய, மாநில அரசின் சில கல்வி நிறுவனங்களுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்., அணையை கட்டிய தலைமை இன்ஜினியர் இவர்.
.இவர் நீர்தேக்கங்களில் தானியங்களை கொண்டு மதகு அமைப்பதில் திறன் பெற்றவர். குவாலியர், கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இவ்வகை மதகுகளை அமைத்துள்ளார். ஹைதராபாத் நகருக்கு வெள்ள பாதுகாப்பு முறைகள், விசாகபட்டின துறைமுகத்தை கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்கும் திட்டங்கள் ஆகியவை இவரது சாதனையாகும். அறிவியலை கொண்டு புதுமையான, அற்புதமான செயல்திட்டங்களை உருவாக்குவதே பொறியியல்.நாம் தினசரி மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளிலும் பொறியாளர்களின் ஈடு இணையற்ற பங்களிப்பு உள்ளது. அவர்களையும், அவர்களது செயல்திட்டங்களையும் பாராட்டி போற்றுவோம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement