விமான தளம் மீதான தாக்குதலை முறியடிக்க 100 டிரோன்கள் வாங்க விமானப் படை முடிவு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் உள்ள விமான தளங்களை பாதுகாப்பதற்காக, 100 டிரோன்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக விமானப்படை தெரிவித்தது.ஜம்மு காஷ்மீரில் உள்ள விமானப்படை தளத்தின் மீது, கடந்தாண்டு ஜூனில் 2 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிபொருள் ஏற்றி வந்த 2 டிரோன்கள் நடத்திய இந்த தாக்குதலில் கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்தது. மிகவும் பாதுகாப்பான பகுதியாக கருதப்படும் விமானப்படை தளத்துக்குள், டிரோன்கள் மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. இதை எதிர்கொள்ள, வான்வெளி பாதுகாப்பை மேம்படுத்த வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

இந்நிலையில், விமான தளங்கள் மீதான டிரோன் தாக்குதல்களை முறியடிக்க, ரிமோட் கன்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்த கூடிய டிரோன்கள், மருந்து, உணவுப் பொருட்கள் கொண்டு செல்லும் டெலிவரி டிரோன்கள் உள்பட 100 டிரோன்களை வாங்க விமானப்படை முடிவு செய்துள்ளது.  இவை உள்நாட்டு விற்பனையாளர்கள் அல்லது உள்நாட்டிலேயே தயாரிப்பவர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட உள்ளது. 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும், என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.