சென்னை : நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து 100 கோடி ரூபாய் கிளப்பிலும் இணைந்துள்ளது.
தனுஷ் மற்றும் நித்யா மேனன் சிறப்பான நடிப்பில் வெளியாகியுள்ள இந்தப் படம் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
இந்தப் படத்தை தொடர்ந்து அவரது நானே வருவேன் படமும் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படத்தை அவரது சகோதரர் செல்வராகவன் இயக்கியுள்ளார்.
நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் சிறப்பான பல படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் அடுத்தடுத்து 4 படங்கள் ஓடிடியில் வெளியான நிலையில் கடந்த மாதம் 18ம் தேதி அவரது திருச்சிற்றம்பலம் படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் 13 நாட்களிலேயே 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது.

திருச்சிற்றம்பலம் படம்
தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் படம் இயல்பான கதைக்களத்துடன் அதிகமான பிரம்மாண்டங்கள் எதுவும் இல்லாமல் வெளியாகியுள்ளது. ஆண் -பெண் நட்பு, காதல், சென்டிமெண்ட், பிரச்சினைகள் என பல கட்டங்களில் இந்தப் படத்தில் தனுஷ் பயணிக்கிறார்.

அடுத்த வீட்டு பையன் லுக்
தனுஷின் தொடர் வெற்றிக்கு காரணமே அவரது அடுத்த வீட்டுப் பையன் லுக்தான். அதை மிஸ் செய்து அவர் சாகசம் காட்டிய படங்கள் அவருக்கு அதிகமாக கைக்கொடுக்கவில்லை. இந்நிலையில் தற்போது அந்த தனது ஆயுதத்தை மீண்டும் இந்தப் படத்தில் கையிலெடுத்துள்ளார். வெற்றியையும் பெற்றுள்ளார்.

நானே வருவேன் படம்
இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய அண்ணன் செல்வராகவனுடன் தனுஷ் இணைந்துள்ள படம் நானே வருவேன். இந்தப் படம் இந்த மாத இறுதியில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

சாட்டிலைட் உரிமை
இதனிடையே, இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக அவரது திருச்சிற்றம்பலம் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த நிலையில் தற்போது சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இருவேறு ரோல்கள்
நானே வருவேன் படத்தில் நீண்ட காலங்களுக்கு பிறகு தன்னுடைய சகோதரர் செல்வராகவனுடன் தனுஷ் இணைந்துள்ளார். இந்தப் படத்தில் ஹீரோ, வில்லன் என இருவேறு ரோல்களில் தனுஷ் நடித்துள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே தாறுமாறாக அதிகரித்துள்ளது.